சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

தினமணி சிறுவர் மணியில் வெளியான "செல்லாக்காசு" என்ற  சிறுகதையை சாகித்ய அகாதெமியினர் தேர்வு  செய்து "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்னும்  நூலில் இணைத்திருக்கிறார்கள்.

 அந்தக் கதையை என்னை எழுதத் தூண்டியது என் தாய் - தந்தை என்னிடம் கொடுத்த அன்றைய  காசுகள்தான். படத்தைப் பாருங்கள் புரியும்.  மேலும் அந்நூல் குறித்த ஆய்வுரையும் வழங்க என்னைப் பணித்திருக்கிறார்கள் சாகித்ய அகாதெமியினர். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்....

மகாகவி  பாரதியார் , மறைமலையடிகள், பாரதிதாசன், பெரிசாமித்தூரன், கி.வா.ஜ.,  அழ.வள்ளிப்பா, தமிழ்ஒளி, வானதி திருநாவுக்கரசு,  வாண்டுமாமா  முதலிய எழுத்து ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் உள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது.


(தாய்-தந்தை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத சொத்து இவை. 1975களில் இந்தக் காசுகளை வைத்துப் பொருள்களை வாங்கிய அந்த அனுபவம்,  நினைவு நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது.


Comments

  1. இலக்கியமாகட்டும், ஆன்மீகமாகட்டும், சிறுவர் கதையாகட்டும் தங்களின் பதிவு ஒவ்வொன்றிலும் சிறப்பாகவே அமைகிறது. தங்களின் எழுத்துப்பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. 'இலக்கியமாகட்டும், ஆன்மீகமாகட்டும், சிறுவர் கதையாகட்டும் தங்களின் பதிவு ஒவ்வொன்றிலும் சிறப்பாகவே அமைகிறது'என்ற ஐயாவின் கருத்து, உங்கள் எழுத்தை வாசிக்கும் அனைவர் மனத்திலும் தோன்றக்கூடிய எண்ணமே. தங்கள் படைப்புகள் மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!