சிறுவர் கதைக் களஞ்சியம் - நூல் கலந்துரையாடல்

சிறுவர் கதைக் களஞ்சியம் - நூல் விமர்சனம்

முனைவர் சொ.சேதுபதி, முனைவர் இரா.காமராசு அவர்கள் தொகுத்த, பாரதியார், மறைமலையடிகள், கி.வா.ஜ., பெரியசாமி தூரன், பூவண்ணன், அழவள்ளியப்பா,  மலையமான், சரளா ராசகோபாலன், கி.நாச்சிமுத்து, கிருங்கை சேதுபதி, கன்னிக்கோயில் ராஜா, சுப்ரபாரதி மணியன், சிறுவன் மருது உள்ளிட்டோரின்  தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகள் அடங்கி அற்புதமான தொகுப்பு நூல்.

ஜுன் 29ஆம் தேதி அன்று சென்னை சாகித்திய அகாதெமியின்  வெளியீடான சிறுவர் கதைக் களஞ்சியம் - நூல் விமர்சனம் செய்ய அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு திடீரென்று தமிழன்னையே எழுந்தருளியது போல திரு சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் என் கன்னிப் பேச்சைக் கேட்க வந்திருந்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்ததை எல்லோராலும் மறக்கமுடியாது. அதுமட்டுமல்ல... அவருடைய திருக்கரங்களால் குழந்தைப் பாடல்கள் என்ற நூலையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, சிலமணித்துளிகள் பொழிவும் நிகழ்த்தினார்.

இந்த வாய்ப்பை நல்கிய சாகித்ய அகாதெமி நிறுவனத்திற்கும், அக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...









 

Comments

  1. நூல் அறிமுகம் அருமை. விழா நிகழ்வினைப் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!