சிவாய நம திருச்சிற்றம்பலம் கட்டுரையாளர் இடைமருதூர் கி.மஞ்சுளா ( காவேரிப்பாக்கம், அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் மணிவாசகர் குருபூஜை (2013) நாள் மலரில் இடம்பெற்ற கட்டுரை) யானாகி நின்றான் எச்சம்மறி வேன்நான் எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோ வெங்கள் அரனே! அருமருந்தே! எனதமுதே! செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம் என நெஞ்சின்மன்னி யானாகி நின்றானே! (திருவாசகம்., உயிருண்ணிப் பத்து, பா.10) மணிவாசகப் பெருந்தகை, உயிருண்ணிப் பத்து பதிகத்தை சிவானந்த மேலீட்டால் பாடியுள்ளார். மணிவாசகர் தி...