நாடோடிக் கதைகள்-2
பிகார் மாநில நாடோடிக் கதை தமிழில் : இடைமருதூர் கி . மஞ்சுளா ( தினமணி – கொண்டாட்டம் 22.4.18) போதை அழிவின் ஆணிவேர் தேவதூதன் ஒருவன் விமானம் ஒன்றில் அமர்ந்து வான்வெளியில் சென்று கொண்டிருந்தான் . திடீரென்று அவன் மயக்கமுற்றதால் , தடுமாறிப்போன அவன் , விமானத்தோடு பூமியில் வந்து விழுந்துவிட்டான் . அந்த விமானம் ஒரு பிச்சைக்காரன் வீட்டின் முன்பு விழுந்தது . அதைக் கண்ட பிச்சைக்காரன் , " என்னைப் போல இவனும் அதிர்ஷ்டம் இல்லாதவன் போல தோன்றுகிறதே ...' என்று நினைத்தான் . குடிசையின் முன்பு வந்து விழுந்து கிடந்த அந்தத் தேவதூடன் முகத்தில் தண்ணீர் தெளித்து , மயக்கத்தில் இருந்த அவனை விழிக்கச் செய்தான் பிச்சைக்காரன் . ...