Posts

தமிழ் இனி... இடைமருதூர் கி. மஞ்சுளாவின் யூடியூப் சேனல்

 வணக்கம் அன்பான வாசகப் பெருமக்களே.. என்னுடைய வலைப்பூவை எந்தெந்த நாடுகளில் இருந்தோ பார்க்கும்... படிக்கும் வாசகப் பெருமக்களுக்கு என் பணிவான வணக்கம்.  தொடர்ந்து ஆதரவு தருகிறீர்கள் மிக்க நன்றி. அதேபோல.... தற்போது " தமிழ் இனி..." என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கியிருக்கிறேன்... உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்காகவும் பிற மொழி மக்களுக்காகவும் பயனுள்ள தகவல்களை இதில் தர இருக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.... உங்கள் நட்பு வட்டத்திலும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... பயன்பெறுங்கள்... https://youtu.be/vYq9KnRh5Aw

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா கலைஞர் நூற்றாண்டு விழா

Image
 அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் திருப்பத்தூர் மற்றும் சென்னை கிளை நடத்திய கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம். ஜூன் 24, 25. இவ்விழா ஏலகிரியில் நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு விருந்தினராக திரு ஔவையார் அருள் கலந்து கொண்டார். வரவேற்புரை இதயகீதம் ராமானுஜம், வாழ்த்துரை இடைமருதூர் கி. மஞ்சுளா.  நேற்று கண்ணதாசன் குறித்து எழுத்தாளர்கள் வாசித்த கவியரங்கம்... கிராமிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி... இன்று.. அஇதஎச திருப்பத்தூர் மாவட்டம் கிளை, அஇதஎச சென்னை க் கிளை ஏலகிரியில் நடத்தியநூ வெளியீடு... கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. ஔவை அருள் அவர்கள் இரண்டு நாளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.   நிகழ்ச்சியில் கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்  வழங்கினார்.

உறவுச் சுரங்கம் நடத்தும் தமிழ் 36 சங்க இலக்கியங்கள் தமிழ் விருது

Image
 பாரதிய வித்யா பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், உறவுச் சுரங்கம் இணைந்து நடத்தும் தமிழ் 36  சங்க இலக்கியங்கள்... நிகழ்ச்சியில் இன்று "தமிழ் விருது" பெற்றவர்  இடைமருதூர் கி.மஞ்சுளா

தந்தையர் தினத்தை முன்னிட்டு ஜூன்-18.. தந்தை தொடர்பான நூல் அறிமுகம்

Image
 அப்பா தொடர்பாக இடைமருதூர் கி.மஞ்சுளா தொகுத்த ( 37 சிறுகதைகள்) "அப்பாக்கள் பலவிதம்" என்ற தொகுப்பை அடுத்து....   அப்பா தொடர்பாக அவரே எழுதிய 16 சிறுகதைகள் அடங்கிய நூல் "தந்தைக்குத் தலைவணங்கு".. .. இரு நூல்களுமே மணிவாசகர் பதிப்பக வெளியீடு... கதைகள் ஒவ்வொன்றும் எதார்த்தத்தின் வெளிப்பாடு, ஒவ்வொரு கதையின் கருவும் நம்முடன் உலாவரும் அப்பாக்கள் பலரின் மறுபக்கம்..... அப்பாக்களின் பாசம், தியாகம் கூடவே சஸ்பென்ஸ் எல்லாவற்றையும் குழைத்துத் தரும் சிறுகதைகள்.

தமிழ் 36 - சங்க இலக்கியம் - தமிழ் விருது- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
 முனைவர் உலகநாயகி பழனி அவர்களால் (உறவுச் சுரங்கம்)  தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சங்க இலக்கியச் சொற்பொழிவுகள்... தமிழ் 36 - சங்க இலக்கியங்கள்  20.6.2023  செவ்வாய்க்கிழமை  முனைவர் அரங்க இராமலிங்கம் அவர்கள் தலைமையில்  நடைபெறும் நிகழ்ச்சியில்  "தமிழ் விருது" பெறுபவர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள்.

தமிழமுது- காலாண்டிதழ் ஆவணத் தமிழ்.... மிக விரைவில்...

Image
 தினமணியில் கடந்த 14 ஆண்டுகளாக முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணியில் ஞாயிறு தோறும் வெளியாகும் தமிழ் இலக்கியப் பகுதியான "தமிழ்மணி" பகுதிக்குப் பொறுப்பாசிரியராக இருந்தவர். தற்போது  மணிவாசகர் பதிப்பத்திற்கும், நூற்றாண்டுகள் கடந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழுக்கும் பிழை திருத்துநராகவும், நூல் வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.   மிக விரைவில் இடைமருதூர் கி.மஞ்சுளாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவர இருக்கிறது "தமிழமுது" காலாண்டிதழ்.  முத்தமிழுக்கு மட்டுமல்ல, அறிவியல் தமிழ், கணினித் தமிழ், கல்லெட்டுத் தமிழ், ஓலைச்சுவடி தமிழ், தமிழ் வளர்ந்த வரலாறு  எனப் பலவற்றுக்கும் ஏற்றம் தந்து வெளிவர இருக்கிறது. இவ்விதழ் தனிச்சுற்றுக்கு மட்டுமானது.  தனி இதழ் ரூ.30. ஆண்டுச் சந்தா (அஞ்சல் செலவு உட்பட) ரூ.200 ஐந்தாண்டு சந்தா ரூ.1000. புரவலர் தொகை - ரூ.5000 இதழின் பிரதிகளை பிடிஎஃப் படிவத்தில் பெற விரும்புபவர்கள் சந்தாதாரராக இருப்பது அவசியம். சந்தா செலுத்த விரும்புவோர் 9382693102 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்டுகிறோம். இந்நூ

கம்பன் கழகம், சென்னை. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி...

Image
 சென்னை கம்பன் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. உமறுப்புலவரின் சீறாப்புராணம் பேச்சுப் போட்டியின் நடுவர்களே - இடைமருதூர் கி.மஞ்சுளா, திரு.ஜான் தன்ராஜ் (கலைஞர் தொலைக்காட்சி) சென்னைக் கம்பன் கழகத்தார்: திருமதி சாரதா, நம்பி ஆரூரன், திருமதி உலகநாயகி பழனி, திருமதி வாசுகி கண்ணப்பன்,  புதுகை தருமராசன், திரு பாலசீனிவாசன் மற்றும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் விஜய கிருஷ்ணன், ஆதிரா முல்லை, நெல்லை சு.முத்து ஆகியோர்