மன அமைதி வேண்டுமா....
"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி: பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வ...
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete