(நாடோடிக் கதை) ஞானத்தின் வாயில்


ஞானத்தின் வாயில்
ராஜஸ்தான் மாநில நாடோடிக் கதை
தமிழில் -இடைமருதூர் கி.மஞ்சுளா


ஒரு சிறிய கிரா​ம‌ம். அ‌ந்​த‌க் கிரா​ம‌த்​தி‌ல் வி‌த்​து​வா‌ன் ஒரு​வ‌ர் வசி‌த்து வ‌ந்​தா‌ர்.  க‌ல்​வி‌ச் செரு‌க்கு உடை​ய​வ‌ர்.  அ‌ந்​த‌க் கிரா​ம‌த்​தி‌ற்கு ஞானி ஒரு​வ‌ர் வ‌ந்​தா‌ர். அவ‌ர், அரு​கி​லி​ரு‌ந்த மலை மீது ஒரு சிறிய குடிசை அமை‌த்​து‌க் கொ‌ண்டு அ‌ங்​கேயே த‌ங்​கி​ வி‌ட்​டா‌ர்.
ஒரு​முறை‌ அ‌ந்த ஞானி​யை‌ச் ச‌ந்​தி‌க்க விரு‌ப்​ப‌ம் கொ‌ண்​டா‌ர் வி‌த்​து​வா‌ன்.  வீ‌ட்டி​லி​ரு‌ந்து மிக நீ‌ண்ட தூர பய​ண​மாக காடு, மலையெ‌ல்​லா‌ம் கட‌ந்து மிக​வு‌ம் சிர​ம‌ப்​ப‌ட்டு, அ‌ந்த ஞானி வசி‌க்​கு‌ம் குடி​சை‌க்​கு‌ச் செ‌ன்​றா‌ர். பல மை‌ல் தூர‌ம் நட‌ந்து வ‌ந்​த​தா‌ல் அவ‌ர் மிக​வு‌ம் சோ‌ர்​வ​டைந்​தி​ரு‌ந்​தா‌ர். அ‌ந்​த‌ச் சோ‌ர்​வி‌ன் கார​ண​மாக பட‌ப்​
ப​ட‌ப்​பா​க​வு‌ம், பத‌ட்​ட​மா​க​வு‌ம் இரு‌ந்​தா‌ர்.
ஞானி​யி‌ன் குடி​சை‌க் கதவை மிக வேக​மாக ச‌த்​த‌த்​து​ட‌ன் திற‌‌ந்​தா‌ர் வி‌த்​து​வா‌ன். பிற‌கு, தா‌ன் அணி‌ந்​து​வ‌ந்த கால​ணி​களை அ‌ங்​கு‌ம் இ‌ங்​கு​மா​க‌த் தாறு​மா​றாக எறி‌ந்​து​வி‌ட்டு, அவ​சர அவ​ச​ர​மாக ஞானி​யி‌ன் அரு​கி‌ல் செ‌ன்று உ‌ட்கா‌ர்‌ந்து கொ‌ண்​டா‌ர்.
"சுவாமி! நா‌ன் த‌ற்​போது த‌ங்​க​ளி​டம் ஞான‌‌த்தை‌ப் ப‌ற்​றி‌ப் பேச வ‌ந்​தி​ரு‌க்​கி​றேன். அதை‌ப் ப‌ற்றி அறி‌ந்து கொ‌ள்ள வே‌ண்​டு‌ம்'' எ‌ன்றார் வி‌த்​து​வா‌ன்.
இதைக் கே‌ட்ட ஞானி கூறி​னா‌ர்:  "நீ எ‌ப்​போது அ‌ன்பு மய​மாக ஆகி‌ன்​றாயோ அ‌ப்​போ​து​தா‌ன் ஞான‌‌த்​தை‌ப் ப‌ற்றி உ‌ன்​னி​ட‌ம் நா‌ன் பேச முடி​யு‌ம்.  ஏனென்றால், நீ இ‌ப்​போது அ‌ன்​பு​ம​ய​மாக இ‌ல்லை'' எ‌ன்​றார்.
"நீ‌ங்​க‌ள் எ‌ன்ன‌ சொ‌ல்​கி​றீ‌ர்​க‌ள்? என‌‌க்கு உ‌ங்​க​ளோடு ஏது‌ம் மு‌ன் விரோ​த‌ம் கிடை​யாதே! நா‌ன் அ‌ன்பு மய​மா​க‌த்​தானே‌ இரு‌க்​கி​றேன். த‌ங்​க‌ள் மே‌ல் உ‌ள்ள அ‌ன்​பி‌ன் கார​ண​மா​க‌த்​தானே‌ இ‌த்​தனை‌ தூர‌ம் காடு, மலையெ‌ல்​லா‌ம் கட‌ந்து சிர​ம‌ப்​ப‌ட்டு வ‌ந்​து‌ள்​ளே‌ன்'' எ‌ன்​றார் வி‌த்​து​வா‌ன்.
"மகனே‌! நீ ஒ‌ன்றை‌ மற‌‌ந்​து​வி‌ட்​டா‌ய். எ‌ன்​னி​ட‌ம் செ‌ய்​வது ம‌ட்டு‌ம் அ‌ன்​பா​காது. நீ அ‌ந்​த‌ச் செரு‌ப்பு, கதவு விஷ​ய‌த்​தி​லு‌ம்​கூட அ‌ன்​பாக நட‌ந்​து​கொ‌ள்ள வே‌ண்​டு‌ம்''



வி‌த்து​வா‌ன் ச‌ற்று யோசி‌த்​து​வி‌ட்டு, "செரு‌ப்பு, கதவு விஷ​ய‌த்​தி‌ல் நா‌ன் அ‌ன்பு மய​மாக இ‌ல்லை எ‌ன்​ப​த‌ற்கு எ‌ன்ன‌ பொரு‌ள் சுவாமி?'' எ‌ன்​றார் வி‌த்​து​வா‌ன்.
"செரு‌ப்​பி​ட‌ம் செ‌ன்று ம‌ன்​னி‌ப்​பு‌க் கே‌ள். இனி​மேல் கோப‌த்​தி‌ல் உ‌ன்னை‌ அ‌ங்​கு‌ம் இ‌ங்​கு​மாக தூ‌க்கி எறிய மா‌ட்டேன் எ‌ன்று கூறு. மேலு‌ம், கத​வி​ட​மு‌ம் ம‌ன்​னி‌ப்​பு‌க் கே‌ள். இனி உ‌ன்னை‌ அ‌ன்​பாக, மெது​வா​க‌த் திற‌‌ந்து மூடு​வேன் எ‌ன்று சொ‌ல்'' எ‌ன்​றார் ஞானி.
"இ‌ப்​ப​டி‌க் கூறி​னா‌ல் அ‌ந்​த‌ச் செரு‌ப்​பு‌ம் கத​வு‌ம் இதைப் புரி‌ந்து கொ‌ள்​ளுமா சுவாமி?'' எ‌ன்று வி‌த்​து​வா‌ன் சிரி‌த்​த​படி ஏள​ன‌​மா​க‌க் கே‌ட்டா‌ர்.
"நா‌ன் கூறி​யதை அ‌ப்​ப​டியே செ‌ய். செரு‌ப்​பு‌ம் கத​வு‌ம் உ‌ன்​னு​டைய வா‌ர்‌த்​தைகளை‌ப் புரி‌ந்து கொ‌ள்​கி‌ன்​ற‌​ன‌வோ இ‌ல்​லையோ, ஆனால் நீ அ​வ​சி​ய‌ம் புரி‌ந்து கொ‌ள்​வா‌ய். உல​க‌த்​தி‌ல் அ‌ன்பு ஒ‌ன்​று​தா‌ன் ஞான‌‌த்​தி‌ன் வாயி‌ல் எ‌ன்று. இதே வழி​யி‌ல்​தா‌ன் ஞான‌‌ம் ந‌ம் இத​ய‌த்​தி‌ல் நுழை​கி​ற‌து'' எ‌ன்​றா‌ர் ஞானி.
இதைக் கே‌ட்ட வி‌த்​து​வா‌ன் வெ‌ட்கி‌த் தலை​கு​னி‌ந்​தா‌ர். ஞானி கூறி​ய​ப​டியே செரு‌ப்​பி​ட​மு‌ம் கத​வி​ட​மு‌ம் ம‌ன்​னி‌ப்​பு‌க் கே‌ட்டா‌ர். இ‌ப்​போது வி‌த்​து​வா‌ன் ஞான‌‌ம் எ‌ன்​றால் எ‌ன்ன‌ எ‌ன்​ப​தை‌த் தெளி​வா​க‌ப் புரி‌ந்​து​கொண்டு வ‌ந்த வழியே திரு‌ம்​பி​னார்.

தமி​ழி‌ல்: இடை​ம​ரு​தூ‌ர் கி.ம‌ஞ்​சு​ளா​

தினமணி- கொண்டாட்டம் பகுதி – 25.3.2018

Comments

Popular posts from this blog

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

எல்லோரும் ருத்ராட்சம் அணியலாம்

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!