தினமணி சிறுவர் மணியில் வெளியான "செல்லாக்காசு" என்ற சிறுகதையை சாகித்ய அகாதெமியினர் தேர்வு செய்து "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்னும் நூலில் இணைத்திருக்கிறார்கள். அந்தக் கதையை என்னை எழுதத் தூண்டியது என் தாய் - தந்தை என்னிடம் கொடுத்த அன்றைய காசுகள்தான். படத்தைப் பாருங்கள் புரியும். மேலும் அந்நூல் குறித்த ஆய்வுரையும் வழங்க என்னைப் பணித்திருக்கிறார்கள் சாகித்ய அகாதெமியினர். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்.... மகாகவி பாரதியார் , மறைமலையடிகள், பாரதிதாசன், பெரிசாமித்தூரன், கி.வா.ஜ., அழ.வள்ளிப்பா, தமிழ்ஒளி, வானதி திருநாவுக்கரசு, வாண்டுமாமா முதலிய எழுத்து ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் உள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. (தாய்-தந்தை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத சொத்து இவை. 1975களில் இந்தக் காசுகளை வைத்துப் பொருள்களை வாங்கிய அந்த அனுபவம், நினைவு நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது.
வணக்கம் தமிழறிஞர்களே அன்பு நண்பர்களே... இன்று அக்.12 இன்று நம் தாய்மொழியான தமிழ், செம்மொழி தகுதி பெற்றத் திருநாள். இதை நாம் உலகமெங்கும் கொண்டாடி மகிழ வேண்டாமா..... தமிழ்மொழி பேசும் (பிறமொழிக் கலப்பில்லாமல்) ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா.... ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அம்மாற்றம் முதலில் உன்னிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் கூறிய அருள் வாக்கிற்கிணங்க... இன்று... இந்த ஆண்டு தமிழ்ச் செம்மொழி நாளை நாற்பதுக்கும் மேற்பட்ட என் இனிய தமிறிஞர்கள், தோழர் - தோழியருக்குத் தமிழ்ச் செம்மொழி நாள் வாழ்த்து (குறுஞ்செய்தி மூலம்) தெரிவித்து, என்னிடமிருந்தே இதைத் தொடங்கி வைத்தேன். பலரும் இதற்கு மறுமொழி கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அவர்களுள் புலவர் பதுமனார், திரு ராஜ்கண்ணன்,, கணையாழி ஓவியர் திரு சீனிவாசன்,, திரு.தெ.ஞானசுந்தரம், செம்மூதாய் சு.சதாசிவம், பேராசிரியர் ரமேஷே், திருமதி தாயம்மாள் அறவாணன், திரு.முத்துக்குமார சுவாமி, தோழி மகேஸ்வரி, திராணி உ.மணி போன்ற...
அனந்தபாரதியின் நொண்டி நாடகம்! தினமணி - தமிழ்மணி (20.3.16) by - இடைமருதூர் கி.மஞ்சுளா சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதா...
Comments
Post a Comment