அனந்தபாரதியின் நொண்டி நாடகம்! தினமணி - தமிழ்மணி (20.3.16) by - இடைமருதூர் கி.மஞ்சுளா சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதா...
வணக்கம் தமிழறிஞர்களே அன்பு நண்பர்களே... இன்று அக்.12 இன்று நம் தாய்மொழியான தமிழ், செம்மொழி தகுதி பெற்றத் திருநாள். இதை நாம் உலகமெங்கும் கொண்டாடி மகிழ வேண்டாமா..... தமிழ்மொழி பேசும் (பிறமொழிக் கலப்பில்லாமல்) ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா.... ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அம்மாற்றம் முதலில் உன்னிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் கூறிய அருள் வாக்கிற்கிணங்க... இன்று... இந்த ஆண்டு தமிழ்ச் செம்மொழி நாளை நாற்பதுக்கும் மேற்பட்ட என் இனிய தமிறிஞர்கள், தோழர் - தோழியருக்குத் தமிழ்ச் செம்மொழி நாள் வாழ்த்து (குறுஞ்செய்தி மூலம்) தெரிவித்து, என்னிடமிருந்தே இதைத் தொடங்கி வைத்தேன். பலரும் இதற்கு மறுமொழி கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அவர்களுள் புலவர் பதுமனார், திரு ராஜ்கண்ணன்,, கணையாழி ஓவியர் திரு சீனிவாசன்,, திரு.தெ.ஞானசுந்தரம், செம்மூதாய் சு.சதாசிவம், பேராசிரியர் ரமேஷே், திருமதி தாயம்மாள் அறவாணன், திரு.முத்துக்குமார சுவாமி, தோழி மகேஸ்வரி, திராணி உ.மணி போன்ற...
தமிழனின் தனிக்குணம்! By -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் ""உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு'' என்றான். ÷""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்து கேட்டார். ÷""எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா? சென்னையில் யாரிடம், எப்படிப் பேசிப் பொருள்களை வாங்குவது என்று பயந்து கொண்டிருந்தேன். அந்தச் சிரமத்தைத் தமிழ்நாடு எனக்குக் கொடுக்கவில்லை'' என்று சிரித்துக்கொண்டே கூறினான்.÷ ÷இது தமிழர்களாகிய நாம் பெருமைப்படக்கூடிய விஷயமல்ல; வேதனைப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு வந்தாரை எப்படி வாழவைக்கிறது தெரியுமா? தன் சுயத்தை இழந்துதான்! தன் தாய்மொழிப் பற்றை மறந்துதான்! ÷சென்னை புறநகர...
Comments
Post a Comment