Posts

திரிமலம் தீர்த்த தேசிகன்

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் ஆக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா இக்கட்டுரை அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் (காவேரிப்பாக்கம்)  17.1.2011 திங்கட்கிழமை அன்று நிகழ்ந்த கண்ணப்பர் திருநாளில் வெளியிடப்பட்ட திருவருணை "பால் சுவாமிகள்"  தெய்வத்திரு பொன்னுசாமி அடிகளாரின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மலரரில் வெளியானது. மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியம் ஆக்கி அருள்வழி அதனால் என்னுள் புகுந்தனைச எனினே, முன்னைத் திரிமலம் தீர்த்த தேசிக! அருணந்தி சிவமும் இருபா இருபஃதும்:    சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று இருபா இருபஃது. இந்நூல் அருணநந்தி சிவாசாரியாரால் அருளிச் செய்யப்பட்டது. இவரு காலம் 1222-க்குச் சில ஆண்டுகள் பின்பு என்று கூறுவர். இருபா -இரண்டு வகைப்பா, இருபஃது -  20 பாடல்கள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஆகிய இரண்டும் மாறிமாறி வர, அவ்வகையில் 20 பாடல்களைக் கொண்டது. அதாவது, வெண்பா ப10, ஆசிரியப்பா 10. மெய்கண்ட சாத்திரத்தில், பா வகையிலும் தொகை வகையிலும் பெயர் பெற்ற நூல் இது ஒன்றேயாகும். மேலும், அந்தாதித் தொடையிலும் அமைந்தது. சைவ சித்தாந்தச் செந்நெறிய...
Image
சிவாய நம திருச்சிற்றம்பலம்    கட்டுரையாளர் இடைமருதூர் கி.மஞ்சுளா ( காவேரிப்பாக்கம், அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம்  மணிவாசகர் குருபூஜை (2013) நாள் மலரில் இடம்பெற்ற கட்டுரை) யானாகி நின்றான் எச்சம்மறி வேன்நான் எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோ வெங்கள் அரனே! அருமருந்தே! எனதமுதே! செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம் என நெஞ்சின்மன்னி யானாகி நின்றானே!                                                                              (திருவாசகம்., உயிருண்ணிப் பத்து, பா.10)  மணிவாசகப் பெருந்தகை, உயிருண்ணிப் பத்து பதிகத்தை சிவானந்த மேலீட்டால் பாடியுள்ளார். மணிவாசகர் தி...

மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்

சிவாய நம திருச்சிற்றம்பலம் கட்டுரை வடிவாக்கம் - இடைமருதூர் கி.மஞ்சுளா காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் நிகழ்த்திய மணிவாசகப் பெருமான் குருபூஜையின்போது வெளியான மலரில் இடம்பெற்ற கட்டுரை இது. மணிவாசகப் பெருமான் எதைக்கண்டெல்லாம் அஞ்சினார், எதைக்கண்டு அஞ்சவில்லை என்பதை பெருந்தகை வாய்மொழியாகவே காண்போம். மணிவாசகர் மலரடி வாழ்க! மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும் அச்சம் என்பது அஞ்சுதல். அதாவது, சிவபெருமான் ஒருவனே தனிமுதற் பொருள் என் அறிந்து, அவனிடத்தில் அன்பு இல்லாதவரைக் காணும்போது, அவர்களது தொடர்பு உலக வாதனையைப் பயக்குமோ என அஞ்சுதல். திருவாசகத்தில் கூறப்பட்ட மற்ற 34 பதிகங்களிலும் (515 பாடல்கள்) கூறப்படாத சில கருத்துகள் 35-ஆவது பதிகமான அச்சப்பத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வச்ச ப்பத்துக்கு ஆனந்தம் உறுதல், அதாவது, நேயத்தில் ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்திமை என்பது பழைய குறிப்பு. இறைவன் ஒருவனே அறியத்தக்கவன், காணத்தக்கவன் என்ற உறுதியை விளக்குவதால் இப் பத்து ஆனந்தமுறுதல் ஆயிற்று என்பர். மூவர் முதலிகள் தேவாரம்் முழுவதிலும் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சி...

எல்லோரும் ருத்ராட்சம் அணியலாம்

ருத்ராட்சம் தோன்றிய விதம் சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே... குளித்தவர்கள்தான் சோப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா.. ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து, நோயில் இருப்பவனுக்குக் கிடையாது என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா... அதுபோலத்தான் சுத்தபத்தமாக இருப்பவர்கள் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும். ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே, உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். இது ஒருபுறமிருந்தாலும், எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா... ஆமாம். ருத்ராட்சத்தை யா...

அனுபவம் பலவிதம்

Image
உன்னைத் தேடி உன் வீட்டுக்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம் என்று கூறுகிறது தைத்ரீய உபநிடதம். --------- விட்டுவிடப் போகுது உயிர் விட்டஉடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேர மும்சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். -பட்டினத்தார் ------- என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க உன்னை உணராமல் உடல் இழந்தேன் பூரணமே... என்னதான் பெற்றாலும் எப்பொருள் பெற்றாலும் உன்னை அடையாதார் உய்வரோ பூரணமே... -பட்டினத்தார் ---------- இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் எஙகோவே! -துன்றுலே வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம். -வள்ளலார் --------- கோபத்தில் ஒருவனை ஒரு அடி அடித்து விடுவது எளிது. ஆனால், எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்தக் கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும். -சுவாமி விவேகானந்தர் --------

புதைபொருளாகும் பொருளாதாரம்

இடைமருதூர் கி.மஞ்சுளா  உள்ளதைச் சொல்கிறேன்....நல்லதைச் சொல்கிறேன்...   பொருளாதாரம் என்பது பொருளைச் சார்ந்ததா அல்லது மக்களைச் சார்ந்ததா அல்லது சமுதாயத்தைச் சார்ந்ததா...படித்தவர்களுக்கு மட்டுமா அல்லது பாமர்ர்களுக்குமா.... பொருலாதாரம் என்பது வெற்றுப் பேச்சா அல்லு வாழ்க்கை நடைமுறைக்கு சாத்தியமா... இத்தகைய கேள்விகள் பாமரர்கள்கூட இன்றைய நாள்களில் கேட்டகத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதாரம் எந்ற சொல்லின் மூலம், கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதன் பொருள் வீட்டின் நிர்வாகம். உள்ளதைக் கொண்டு தேவைகளை முடியும் மட்டும் நிறைவுசெய்து கொள்வது. பொருளாதாரம் சமூகவியலைச் சார்ந்தது. அது பொருள், சேவையின் உற்பத்தி, பங்கீடு, நுகர்வுகளைப் பற்றிய கல்வி. இக்கல்வியைப் பற்றிப் படித்தால் மட்டும் போதுமா... வாழ்க்கைக்குப் பயன்படவேண்டாமா... அதுதானே கல்வியின் பயன்! ஆடம்ஸ்மித் என்பவர், பொருளாதாரம் என்பது மனித வாழ்வையும் அவர் பொருள் தேவைகளையும் பற்றி அறிவது என்கிறார். இதில் ஒரு பகுதி பொருலாதார வளம் என்றால், மற்ற முக்கியமான பகுதி மனித வளம் என்கிறார் ஆல்பிரட் மார்ஷல். பொருளாதாரம் மக்களைச் சார்ந்தது. அவர்களின்...

மூன்றாவது...தாருங்கள்

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், நாவண்மை உடையவர், அருங்குணம் கொண்டவர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஒரு முறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்கு பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நூற்றுக்காரத் தெரு என்றும் அழைப்பர். இந்த இண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மகாவித்துவான், இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று கூறினார். அவர் கூறியதில் உள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல். (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) இரவில் சுண்ணாம்பை அவசியம் ஏற்பட்டாலொழிய இரவல் வாங்கக்கூடாது என்று கூறுவது முன்னோர் வாக்கு. அவ்வாறு வாங்கினால் மூன்றாவது தாருங்கள் என்று கூற வேண்டும் என்பார்கள். இது இன்றைக்கும் வழக்கில் உள்ளது. அதைத்தான் மகாவித்துவான் நகைச்சுவை உணர்வுடன் கூறியிருக்கிறார்.