Posts

நீண்ட இடைவெளிக்குப் பிறகு....

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாசகப் பெருமக்களே, நண்பர்களே, உறவினர்களே.... முதற்கண் வணக்கம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களைச் சந்திக்கிறேன். காரணம் பத்திரிகைப் பணி. சிவ அன்பர்கள், நண்பர்கள் தரும் வேண்டுகோள் (கட்டுரை வரைந்து தரவேண்டி). தட்டமுடியவில்லை. இதற்கிடையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வேறு. மேலும், வாசி, கே.எம்.வி., மணிவாசகப்பிரியா, பிஞ்ஞகன், ராதாவனமாலி, ஜோதிமகாலிங்கம், ஏகம்பர் நாயகி, பரிபூர்ணா, சிவமானசா, தகவல் தேனீ, கந்தழி, தாசரதி, தமிழ்ப்பிரேமி, ஹரிஹரசுதா, வேம்புமகள் முதலிய பல புனைபெயர்களளில் கட்டுரைகள் எழுதவேண்டியுள்ளது. அப்பப்பா..... இத்தனை புனைபெயர்களா.... எனகிறீர்களா.... என்ன செய்வது... இப்படிக் கட்டுரைகள் எழுதி பலரது மாற்றுக் கருத்துகளிலிருந்தும் பார்வையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கிறதே.... அதுபோகட்டும். சமீபத்தில் அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா (16.2.2014) நிகழ்ச்சியில் நூலின் முதல் பிரிதியை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தினத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, "கழல் பேணுதல்" என்ற தலைப்பில் சிற...

மணிவாசகரின் முத்தான மணிமொழிகள்...பத்து...

Image
மணிவாசகப் பெருந்தகையின் மணிமொழிகளைக் கற்போம், இறைவனின் - சிவபெருமானின் அருமை பெருமைகளை அறிவோம், அடியார்களின் இணக்கத்தை நாடுவோம்.... கன்றைப் பிரிந்த - இழந்த  பசுவைப் போல  கசிந்து கண்ணீர் மல்கி இறைவனின் திருவருளுக்காக ஏங்கித் தவிப்போம்....இந்த ஏக்கமே நமக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும். இறைவனுக்காக மட்டுமே ஏங்குவோம்....  இங்கு காட்சியளிப்பவர் இடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான்.  இடைமருதன் இருக்க இனி இடையூறுகள் ஏது..... 1. கடவுளின்  இருப்பினை உணர்ந்தவர் ஜாதி பேதம் பார்க்க மாட்டார்கள். யாராவது ஜாதி பேதம் பாராட்டுகிறார்கள் என்றால்,  அவர்கள் இன்னும் கடவுள் இருப்பை உணரவில்லை என்பது பொருள். 2. அரசனாகிய என் இறைவனே! பொன்னம்பலத்திலே கூத்தாடும் என் பேரமுதே! என்று உளமார நினைத்து, வாயாற வாழ்த்தி நின் திருவடியினையே நோக்கி நின்றேன். அங்ஙனம் நிற்கும் அடியேன் நிலை, தக்க இறை நெருங்கி வருமாறும் கொக்கின் நிலையைப் போல் இருந்தது. 3. இறைவன் தன்னை ஆட்கொண்டவுடன் அறியாமைக் குணம், தமர் - பிறர் என்ற பாகுபாட்டு உணர்வு,  யான் என்ற செருக்கு,  எனது எனும...

மன அமைதி வேண்டுமா....

Image
"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி:  பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில்  ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வ...

திரிமலம் தீர்த்த தேசிகன்

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் ஆக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா இக்கட்டுரை அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் (காவேரிப்பாக்கம்)  17.1.2011 திங்கட்கிழமை அன்று நிகழ்ந்த கண்ணப்பர் திருநாளில் வெளியிடப்பட்ட திருவருணை "பால் சுவாமிகள்"  தெய்வத்திரு பொன்னுசாமி அடிகளாரின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மலரரில் வெளியானது. மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியம் ஆக்கி அருள்வழி அதனால் என்னுள் புகுந்தனைச எனினே, முன்னைத் திரிமலம் தீர்த்த தேசிக! அருணந்தி சிவமும் இருபா இருபஃதும்:    சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று இருபா இருபஃது. இந்நூல் அருணநந்தி சிவாசாரியாரால் அருளிச் செய்யப்பட்டது. இவரு காலம் 1222-க்குச் சில ஆண்டுகள் பின்பு என்று கூறுவர். இருபா -இரண்டு வகைப்பா, இருபஃது -  20 பாடல்கள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஆகிய இரண்டும் மாறிமாறி வர, அவ்வகையில் 20 பாடல்களைக் கொண்டது. அதாவது, வெண்பா ப10, ஆசிரியப்பா 10. மெய்கண்ட சாத்திரத்தில், பா வகையிலும் தொகை வகையிலும் பெயர் பெற்ற நூல் இது ஒன்றேயாகும். மேலும், அந்தாதித் தொடையிலும் அமைந்தது. சைவ சித்தாந்தச் செந்நெறிய...
Image
சிவாய நம திருச்சிற்றம்பலம்    கட்டுரையாளர் இடைமருதூர் கி.மஞ்சுளா ( காவேரிப்பாக்கம், அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம்  மணிவாசகர் குருபூஜை (2013) நாள் மலரில் இடம்பெற்ற கட்டுரை) யானாகி நின்றான் எச்சம்மறி வேன்நான் எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோ வெங்கள் அரனே! அருமருந்தே! எனதமுதே! செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம் என நெஞ்சின்மன்னி யானாகி நின்றானே!                                                                              (திருவாசகம்., உயிருண்ணிப் பத்து, பா.10)  மணிவாசகப் பெருந்தகை, உயிருண்ணிப் பத்து பதிகத்தை சிவானந்த மேலீட்டால் பாடியுள்ளார். மணிவாசகர் தி...

மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்

சிவாய நம திருச்சிற்றம்பலம் கட்டுரை வடிவாக்கம் - இடைமருதூர் கி.மஞ்சுளா காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் நிகழ்த்திய மணிவாசகப் பெருமான் குருபூஜையின்போது வெளியான மலரில் இடம்பெற்ற கட்டுரை இது. மணிவாசகப் பெருமான் எதைக்கண்டெல்லாம் அஞ்சினார், எதைக்கண்டு அஞ்சவில்லை என்பதை பெருந்தகை வாய்மொழியாகவே காண்போம். மணிவாசகர் மலரடி வாழ்க! மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும் அச்சம் என்பது அஞ்சுதல். அதாவது, சிவபெருமான் ஒருவனே தனிமுதற் பொருள் என் அறிந்து, அவனிடத்தில் அன்பு இல்லாதவரைக் காணும்போது, அவர்களது தொடர்பு உலக வாதனையைப் பயக்குமோ என அஞ்சுதல். திருவாசகத்தில் கூறப்பட்ட மற்ற 34 பதிகங்களிலும் (515 பாடல்கள்) கூறப்படாத சில கருத்துகள் 35-ஆவது பதிகமான அச்சப்பத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வச்ச ப்பத்துக்கு ஆனந்தம் உறுதல், அதாவது, நேயத்தில் ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்திமை என்பது பழைய குறிப்பு. இறைவன் ஒருவனே அறியத்தக்கவன், காணத்தக்கவன் என்ற உறுதியை விளக்குவதால் இப் பத்து ஆனந்தமுறுதல் ஆயிற்று என்பர். மூவர் முதலிகள் தேவாரம்் முழுவதிலும் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சி...

எல்லோரும் ருத்ராட்சம் அணியலாம்

ருத்ராட்சம் தோன்றிய விதம் சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே... குளித்தவர்கள்தான் சோப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா.. ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து, நோயில் இருப்பவனுக்குக் கிடையாது என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா... அதுபோலத்தான் சுத்தபத்தமாக இருப்பவர்கள் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும். ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே, உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். இது ஒருபுறமிருந்தாலும், எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா... ஆமாம். ருத்ராட்சத்தை யா...