சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு
சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு By இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - வெள்ளிமணி) First Published : 21 August 2014 05:36 PM IST புகைப்படங்கள் பஞ்ச (சிவ) மூர்த்திகளுள் ஒருவர் பைரவர். இவரை வைரவர் என்றும் கூறுவர். சிவனின் அம்சமாகத் தோன்றியவர். பைரவர் என்ற சொல்லுக்குக் காவலர் என்று பொருள். இவர் மஹா பைரவர், உக்கிர பைரவர், கால பைரவர், வடுகநாதன், சட்டைநாதர், அஷ்ட பைரவர்கள், யோக பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் முதலிய பல பெயர்களில் அருள் பாலிக்கிறார். நாயைத் தன் வாகனமாகக் கொண்டவர். காரணம், இரவில் நடக்கும் பலவற்றை அறியும் திறன் நாய்க்கு உண்டு. மேலும், காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூட்சும புத்தி கொண்டது நாய். குறிப்பாக, காலன் வருவது, கண்ணுக்குத் தெரியாத பல தீய சக்திகள் அலைவது போன்றவற்றைக் கண்டு அவற்றைத் தெரிவிக்கும் ஆற்றலும் நாய்க்கு உண்டு. அதனால் காவல் தெய்வமான பைரவருக்கு நாய் வாகனமாக அமைந்தது. அசுரர்களை அழிக்க துர்க்கை புறப்பட்டபோது, துர்கைக்குப் படைத்தலைவனாக, அவளுக்கு உதவும் பொருட்டு சிவபெருமானால் (தம் அம்சமாக) அனுப்பப்பட்டவர்தான...