Posts

“சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”

Image
காலம் அறிந்து கூவியுள்ள சேவல் கவிஞர் மயிலாடுதுறை இளைபாரதியின் ஓர் அற்புதமான நூல், “சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”  கன்னிக்கோயில் இராஜா அவர்கள் என்னைக் கை காட்ட, உடனே அவர் எனக்கு இந்நூலை அன்பளிப்பாக அனுப்பி ஒருமாதம் ஆகிறது. உடனே படித்து, பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டேன். என்றாலும், உடனே அவர் நூலுக்கு மதிப்புரை தரமுடியவில்லை. இந்நூலை ஒவ்வொரு பெற்றோரும் முதலில் படிக்க வேண்டும். அடிக் கோடிட்டதில் சில துளிகள்….உங்கள் பார்வைக்கு… 1.    நேரத்தின் அருமையை எடுத்துச் சொல்லி குழந்தைகளை உணரச் செய்ய வேண்டும். காலத்தின் அருமையை எவரொருவர் தன் இளமைக் காலத்திலேயே தெரிந்து கொள்கிறார்களோ, அவர்கள்தான் வாழ்க்கையில் எதை, எப்போது செய்ய வேண்டும் என்கின்ற உணர்வினைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களால்தான் சாதனை வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும். “போகும் காலம் திரும்ப வராது” என்று அவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையல்லவா…? 2.    படிப்புக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. நிறைய படித்தவர்கள் கூட நல்ல பழக்...

தினமணி சிறுவர் மணி... மதி இழந்த மந்தி!

Image
தினமணி சிறுவர் மணி...13.5.2017 மதி இழந்த மந்தி! -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. "கதைத் தாத்தா வந்தாச்சுடா....' என்ற குரல் கேட்டதும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் அனைவரும் "திடுபுடு திடுபுடு' என்று ஒலி எழுப்பியபடி மாடிப் படிகளிலிருந்து இறங்கி, குடியிருப்பின் கீழே ஆஜராகி விடுவார்கள். ""ஒரு ஊர்ல ஒரு....'' என்று அந்தத் தாத்தா ஆரம்பித்ததும் சிறுவர்கள் அனைவரும் "வாவ்வ்வ்வ்'' என்று உற்சாகக் குரல் கொடுப்பார்கள். ÷ அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசிக்கும் மீனாவின் தாத்தா கிராமத்திலிருந்து சென்னை வந்து இரண்டு வாரங்களாகின்றன. மீனாவின் பாட்டி இறந்தபிறகு, தாத்தாவை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்பதால் மீனாவின் அம்மா, அவரைச் சென்னைக்கே அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துவிட்டார். தாத்தா ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியர். ÷ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் அந்தக் குடியிருப்பின் அருகே இருக்கும் சிறு சிமெண்ட் பெஞ்சுகளில் அங்கு வசிக்கும் சிறுவர்கள் அனைவரையும் அமரவைத்து விடுவார். கர்ண பரம்பரைக்...

கலித்தொகையில் கற்புநெறி!

Image
கலித்தொகையில் கற்புநெறி! -மணிவாசகப்பிரியா By- இடைமருதூர் கி.மஞ்சுளா  (தினமணி - தமிழ்மணி 14.5.2017) ÷"கற்பு' என்பதற்கு அகராதியில் கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு, ஆணை, தியானம் எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இங்கு மகளிர் கற்பு குறித்து காண்போம். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்' (6-4) என்று வியந்து போற்றினார் வள்ளுவப் பெருந்தகை. "பெண்ணின் பெருமை' பேசியவர் திரு.வி.க. "புதுமைப் பெண்'களைப் படைத்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். பெண் குழந்தைகள் பற்றி சிறப்பாகப் பாடிவைத்தவர் பாரதிதாசன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர். இப்படி எத்தனையோ அறிஞர்களும் கவிஞர்கள் பெண் பிறவியைப் பெரும் பிறவியாகப் போற்றியுள்ளனர். ÷ஔவையார், காரைக்கால் அம்மையார், சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எனப் பலரும் தம்முடைய பாடல்களில் ஒழுக்கம், கற்பு நெறி போன்றவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதியதன் காரணம், "கற்பு ஒன்றுதான் பெண்ணுக்கு அணிகலன்' என்பதால்தான். அதை இருவருக்கும் (ஆண...

இன்று பத்திரிகை சுதந்திர தினம்

Image
இன்று பத்திரிகை சுதந்திர தினம் 3. 5. 2010 பத்திரிகை சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் அன்று தினமணி பக்கத்தில், தினமணி ஆசிரியரின் பாராட்டோடு பிரம்மாண்டமாய் வெளியான கட்டுரை இது. தினமணி அன்னைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா 3.5.2017

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

Image
தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும் - சைவத்தில்… (சைவ நெறி -அன்பு நெறி -   அருள்நெறி) இடைமருதூர் கி.மஞ்சுளா, எம்.ஏ., எம்ஃபில், . முன்னுரை        அன்பே கடவுள்   என்பதுதான் சைவத்தின் தலையாய மந்திரம். அன்பு, உயிரிரக்கம், ஜீவகாருண்யம், கருணை இவை அனைத்தும் சைவத்தின் ஒழுக்க நெறிகளாகும்.   சைவ சமயத்தின் தனிப்பெருங் கடவுளான அன்பே வடிவான சிவபெருமானை – ஆண்டவனை வணங்கும் அன்பர்கள், அவ்வன்பை இறைவனிடம் மட்டுமல்லாது, உலகில் உள்ள பிற உயிர்களிடமும் காட்டி, மனிதனாகப் பிறந்தவர்கள் தெய்வ நிலைக்கு உயரமுடியும் என்பதை வலியுறுத்தியது சைவ சமயம். கொல்லாமை, புலால் உண்ணாமையே சைவத்தின் ஒழுக்க நெறிகளுள் தலையாயது.   இந்நெறி வழி சைவத்தின் மாண்பையும், அன்பின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தின் அவசியத்தையும், தாவர உணவின் மகத்துவத்தையும் மேன்மைகளையும், தாவர உணவு தவிர்த்த புலால் உணவால் ஏற்படும் தீமைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். சமயமும் மதமும்        சமயம் வேறு, மதம் வேறு. மதம் என்னும் சொல், “கொள்க...