Posts

சிலம்பொலியார் காலமானார்

Image
இன்று காலை (6.4.2019) முனைவர் பா.இறையரசன் அவர்கள் குறுஞ்செய்தி மூலம் மூத்த தமிழறிஞர் சிலம்பொலியார் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். சாகித்ய அகாதெமியில் நடந்த குழந்தை இலக்கியம் தொடர்பான   நிகழ்ச்சியில் இடைமருதூர் கி.மஞ்சுளா பேசுகிறார் என்பதைப் பத்திரிகையில் பார்த்தவுடன் சென்னை வாகன நெரிசலையும் பொருட்படுத்தாமல் வந்தேன் என்று கூறினார். தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கடைசி வரிசையில் வந்து அமர்ந்து என் பேச்சைக் கேட்டு ரசித்ததுடன், அந்நிகழ்வில் எனக்கு திரு பூவண்ணன் அவர்களின் “குழந்தைப் பாடல்கள்” நூலை பரிசளித்து மகிழ்ந்ததை இன்று நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது. அவர் மறைவு தமிழுலக்குக்கு மிகப்பெரிய இழப்பு.

அரசியல்வாதிகளுக்கு ஓஷோவின் அறிவுரை

Image
இன்றைய தினமணியில் 4.3.2019

மார்கழி மகா உற்சவம்

Image
மார்கழி மகா உற்சவம்(2018) – நங்கநல்லூர் ரஞ்சனி சபாவில் திருவையாறு என்று கூறுவதற்குத் தகுந்தபடி 150 இளம் இசைக் கலைஞர்களின் இசைச் சங்கமம் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தது.  நங்கநல்லூரில் 2008 தொடங்கி, சாய் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற இசைப் பள்ளியை நடத்திவரும் நெல்லை மு.விநாயக மூர்த்தியின் சீடர்கள்தாம் இந்நிகழ்ச்சியை படைத்தளித்தனர். வீணை, சித்தார், கீபோர்டு, வயலின் முதலிய இசைக்கருவிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரு பாடலை இசைத்தது செவிக்கு விருந்தளித்தது. கண்ணுக்கும், கருத்துக்கும்தான். தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள், தயானந்த சரஸ்வதி அவர்களின் கீர்த்தனை, திருப்புகழ், விநாயகர் பாடல், கிருஷ்ணன் பாடல் என்று செவியில் தேன் வந்து பாய்ந்தது.  இசைக் குடும்பத்தின் வழி வழியே வந்திருக்கும் திரு விநாயகமூர்த்தியின் தந்தை வி.முருகேசன் அவர்கள் ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல, நாடகக் கலைஞரும் கூட. தாய் வாய்ப்பாட்டு, வீணை இசைக் கலைஞர். நெல்லை விநாயகமூர்த்தி அவர்கள் சமீபத்தில் புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய “இசைக் கடல்” என்ற விருதை நானும் திருமதி வரலட்சுமி   ...

சிறுவர் கதைகள் -உண்மை தந்த பரிசு

Image
புதுகைத் தென்றல் டிசம்பர் 2018-இல் வெளியான "உண்மை தந்த பரிசு"  நூல் விமர்சனப் பார்வை.....அருமை  

திருவாசகம் - காதல் செய்து உய்மின் தினமணி நூலரங்கம்

Image

குழந்தை இலக்கிய விழா!

Image
குழந்தை இலக்கிய விழா ! குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா பிறந்த நாளில் (07.11.2018) குழந்தை இலக்கிய விழா - ஒய் . எம் . சி . ஏ . பட்டிமன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் இடைமருதூர் கி . மஞ்சுளா எழுதிய ‘ உண்மை தந்த பரிசு ’ ( சிறுவர் கதைகள் ), எஸ் . ஆர் . ஜி . சுந்தரம் எழுதிய ‘ தாய் மண் உலா ’ ( சிறுவர் கதைகள் ), மகஸ்ரீ சீனிவாசன் எழுதிய ‘ குச்சிமிட்டாய் ’ ( சிறுவர் பாடல்கள் ), சொ . பத்மநாபன் எழுதிய ‘ அழகிய உலகம் ’ ( சிறுவர் பாடல்கள் ) ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட்டன . நான்கு நூல்களையும் கவிஞர் கா ர்முகிலோன் திறனாய்வு செய்தார் . குழந்தைக்கவிஞர் பேரவைத் தலைவர் திரு . பி . வெங்கட்ராமன் தலைமை வகித்தார் . ‘ ஞானாலயா ’ கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் முன்னதாக ஒய் . எம் . சி . ஏ கெ . பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்றினார் . அரங்கு நிறைந்து வழிய கோலாகலமாக விழா நடைபெற்றது . படத்தில் ( இ - மி ) ஒய் . எம் . சி . ஏ கெ . பக்தவத்சலம் , புதுகை தருமராசன் , ‘ ஞானாலயா ’ கிருஷ்ணமூர்த்தி , பி . வெங்கட்ராமன் , கார்ம...

சாகித்ய அகாதெமி-பால சாஹிதி நிகழ்ச்சி 27-9-18

Image
சாகித்ய அகாதெமி நடத்திய பால சாஹிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர் இலக்கியம் குறைத்து உரையாற்றிய திரு. பாலதி பாலன்(தலைமை), யூமா வாசுகி, ஜி.ராஜாராம், இடைமருதூர் கி.மஞ்சுளா. உடன் கலந்துகொண்டு சிறப்பித்தோர் பேராசிரியர் இராம.குருநாதன், கன்னி்க்கோவில் ராஜா, சூளைமேடு அன்பரசன் மற்றும் பலர்.