மகனிடம் கற்ற பாடம்! - சிறுவர் மணி கதை
மகனிடம் கற்ற பாடம் ! - இடைமருதூர் கி . மஞ்சுளா (தினமணி - சிறுவர்மணி 1.6.2019) சாரதி மிகவும் சுட்டிப் பையன் , புத்திசாலிப் பையனும்கூட . அவனுடைய அம்மா } அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் . அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாரதியின் அம்மா வாஷிங் மெஷினில் நிறைய துணிகளைத் துவைக்கப் போட்டிருந்தார் . அந்த நேரம் பார்த்து திடீரென்று கரண்ட் கட்டானது கண்டு அதிர்ந்தார் . " என்ன இது இப்படி ஞாயிற்றுகிழமையும் அதுவுமா கரண்ட் கட் ஆகுதே .. வாஷிங் மிஷன் போடணுமே ... குழம்புக்கு அரைக்கணும் ... எப்போதான் வருமோ ?' என்று புலம்பத் தொடங்கினார் . 5 நிமிடம் கழித்து கரண்ட் வந்துவிட்டது . உடனே வாஷிங் மெஷினை ஆன் செய்த அம்மாவின் அதிர்ச்சியான குரல் ஹாலில் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த சாரதிக்குக் கேட்டது . " கரண்ட் வந்துடுச்சு ... ஆனால் , வாஷிங் மெஷின் ஓடலையே ... வாங்கி ஆறு மாதம்தானே ஆகுது ... ரிப்பேர் ஆயிடுச்சோ ... இப்ப துணிகளையெல்லாம் எப்படித் தோய்ப்பது ?' அம்மா டென்ஷனின் புலம...