Posts

தினமணி- தமிழ்மணி - நிலையான கதி எது...புதிய பெயரில்.... மீண்டும் இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
நிலையான கதி எது? தினமணி- தமிழ்மணி (25.7.2021) ம.பரஞ்சோதி (இடைமருதூர் கி.மஞ்சுளா) நீண்ட இளைவெளிக்குப் பிறகு.... புதிய பெயரில்....(ம.பரஞ்சோதி) மீண்டும் உங்கள் இ.கி.ம... ..

சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் மற்றும் நாடகம்

Image
 1. பானைக்குள் போன யானை ( சிறுவர் நாடகங்கள்)           2. யானைக்கு உதவிய எறும்புகள்    

திருவாசகம் - எட்டாம் திருமுறை - நூல் விமர்சனம் (தினமணி)

Image
  இன்றைய தினமணியில் ....   என் தாய் தந்த ஊக்கத்தாலும் , ஆதரவாலும் ... அடியேனின் எட்டாண்டு கடும் உழைப்பில் உருவான " எட்டாம் திருமுறையான திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் துணையாகக் கொண்டு " மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம் " என்ற தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வேடு இந்த ஆண்டு (2021) மணிவாசகர் பதிப்பகத்தால் நூலாக மலர்ந்துள்ளது .     இன்றைய தினமணியில் (5.4.2021) அந்நூல் பற்றிய விமசர்சனம் வெளிவந்திருப்பது குருவருளின் , திருவருளின் பெருங்கருணை . இந்நூலிலிருந்து எந்தப் பகுதியையும் நூலாசிரியர் அனுமதி இல்லாமல் எடுத்தாண்டாலோ , அடிக்குறிப்புகள் இல்லாமல் சிற்சில பகுதிகளை ( நூலின் பெயரைக் குறிப்பிடாமல் ) எடுத்துப் பயன்படுத்தினாலோ , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . இதன் முழு உரிமை ஆசிரியருக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குமே உரியது .   ஆய்வை வழிநடத்தி சிறப்பாக உதவிய ( கைட் ) முனைவர் திரு வ . குருநாதன் அவர்களுக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்குநர்கள் ( அன்றைய - இன்றைய ) அவர்...

சரஸ்வதி பூஜை - சிறப்புக் கட்டுரை 25.10.2020 "அவனருளால் அவன் தாள் வணங்கி' இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
    சரஸ்வதி பூஜை -   சிறப்புக் கட்டுரை 25.10.2020   " அவனருளால் அவன் தாள் வணங்கி '   - இடைமருதூர் கி . மஞ்சுளா- ஸ்ரீஆதிசங்கரர் வடமொழியில் இயற்றிய , அம்பிகையின் அழகையும் மாண்பையும் வர்ணித்து எடுத்துரைக்கும் " சௌந்தர்யலஹரி ' யின் முதல் பாடலான " சிவசக்தியா யுக்தோ யதிபவதி சக்தப் பிரபவிதும் ' என்ற சுலோகத்தைக் கவிஞர் கண்ணதாசன் கீழ்க்காணுமாறு தமிழாக்கம் செய்திருப்பார் . " சக்தி யுடன் சிவன் சேர்ந்து லகீன்றனன் சக்தி யின்றிச் சிவன் சற்றும் அசைவனோ ? அத்தன் அரிஅயன் போற்றும் என்தாயுன்னைப் பக்தி கொண்டேத்த முற்புண்ணியம் வேண்டுமே !'   " மங்கள சொரூபனான சிவன் எனும் மகாதேவனும் ஆற்றல் மயமான ( பரா ) சக்தியுடன் கூடியவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆளுவதற்கு ( தோற்றுவிப்பதற்கு ) சக்தி உடையவராகிறார் . அவ்வாறு உன்னோடு கூடியிருக்காவிட்டால் ,   அசையக்கூடத் திறனுள்ளவராக அவர் இருப்பதில்லையன்றோ ? ஆகையால் , அரி , அரன் , பிரமன் ஆகிய மும்மூர்த்திகள் முதலானோராலும் வழிபடப்பெறும் உன்னைப் பூர்...