Posts

மங்கையர் சோலை-பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பு (14.5.2022- 21.5.2022)

Image
பொதிகை தொலைக்காட்சியில் மங்கையர்ச் சோலை நிகழ்சியில், விருந்தினராக நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் பங்கேற்றார். சாதனை மகளிர் நான்கு பேருடன் நானும் ஒரு சாதனைப் பெண்ணாக... அதிலும் "தலைசிறந்த எழுத்தாளர்" என்கிற... நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. விஜய கிருஷ்ணன் அவர்களின் அறிமுகவுரையுடன் அறிமுகமாகிப் பங்கேற்றது மறக்க இயலாத இன்ப நினைவுகள். பொதிகை தொலைக்காட்சிக்கு என் நன்றி. என்னுடைய படிப்பு... எழுத்துப் பயணம், பத்திரிகை பயணம் தொடங்கிய விதம் குறித்தும், என் நூல்கள் செய்த மிகப்பெரிய திருப்புமுனைகள், மறக்க முடியாத அனுபவம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது அதைவிட மகிழ்ச்சியைத் தந்தது. இதன் முதல் பகுதியைப் பார்த்து வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்கள், அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. வரும் வாரம்தான் (21.5.22 இரவு 9 மணி) இந்நிகழ்ச்சி (ஐந்து பெண்களின்) அதிக சூடுபிடிக்கும்படி இருக்கும்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள் வாசகர்களே... -இன்ப அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா...

சிறுவர் (அட்டைப்படக் கதை) கதை- சிறு பழத்து ஒரு விதை (தினமணி-சிறுவர்மணி)

Image
சிறுவர்மணி 16.4.2022 சிறு பழத்து ஒரு விதை- சிறுகதை மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா)

மகளிர் தின விழாவில் சாதனை மகளிரை கௌரவிக்கும் நிகழ்ச்சி 23.3.2022

Image
மகளிர் தின விழாவில் சாதனை மகளிரை கௌரவிக்கும் நிகழ்ச்சி 23.3.2022 இந்நிகழ்ச்சியில் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "சக்திச் சுடர்" விருது தரப்பட்டது. (இந்நிகழ்ச்சி குறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு பொதிகை மின்னல் இதழும், புதுவைத் தென்றல் இதழும் பெருமைப்படுத்தியிருக்கின்றன.

நாயன்மார்கள் நாட்டிய வரலாறு அரங்கேற்றம்- சென்னை பாடி திருவலிதாயம்

Image
சென்னை 24.4.2022 ஞாயிற்றுக்கிழமை சென்னை, பாடி திருவலிதாயம் சிவன் கோயிலில் நாயன்மார்கள் குறித்து 7 நாள்கள் தொடர்ந்து நடந்த நாட்டிய நாடக விழாவின் இறுதி நாளில் (24.4.2022) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். கண்கொள்ளாாக் காட்சியான இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன்... இதில் பங்கேற்று நடித்த ஒவ்வொருவரும் தெய்க் குழந்தைகள் என்றே கூறலாம். கருவிலே திருவான நாயன்மார்களைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய நிகழ்ச்சி இது.. இதைத் தொடர்ந்து நடத்திவரும் திரு. முத்துராமலிங்கம் ஐயாவை இரண்டாவது சேக்கிழார் என்றே போற்றி வணங்குகிறேன்... தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது.

சிறுவர்மணி- அறிபுனை எழுத்தின் முன்னோடி- ஐசக் அசிமோவ்

Image
தினமணி சிறுவர்மணி- 02.04.2022 - இடைமருதூர் கி.மஞ்சுளா அறிபுனை எழுத்தின் முன்னோடி- ஐசக் அசிமோவ்

உலக மகளிர் தின விழா - விருதுகள் (23.3.2022)

Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இந்துஸ்தான் சேம்பரில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி... இடைமருதூர் கி.மஞ்சுளாவின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட "சக்திச் சுடர்" விருது.. வழங்கப்பட்டது..

சந்திப்பு - விஜயா பதிப்பகம்- திரு வேலாயுதம் அண்ணாச்சி அவர்களுடன்....

Image
20.3.22 தினமணி தமிழ்மணியில் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி அவர்களின் முத்து விழா நிகழ்ச்சி பற்றி கலாரசிகன் அவர்கள் சிலாகித்து எழுதியதைப் படித்தபோது, அவரை ஒரு முறையாவது சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று தோன்றியது. அதற்கான வாய்ப்பு உடனே அமைந்ததுதான் பெரும் வியப்பு. இன்று (21.3.2022) என் தோழி மகேஸ்வரி சற்குரு அவர்களுடன் அண்ணாச்சி அவர்கள் வீட்டுக்குச் சென்று.... சந்தித்து ஆசி பெற்றது மிகுந்த மனநிறைவைத் தந்தது. அன்பு, எளிமை, கருணை, கள்ளம் கபடம் இல்லாத தன்மை.... அனைத்துக்கும் சொந்தக்காரர் வேலாயுதம் அண்ணாச்சி அவர்கள்... என்பதை நொடிப் பொழுதில் தெரிந்து கொண்டேன். அண்ணாச்சி அவர்கள் தனது முத்து விழாவை அன்போடு தர... அதை நான் பெற்றுக்கொண்டு, எனது உண்மை தந்த பரிசு என்ற (சிறுவர் கதைகள்) நூல் அவரிடம் கொடுத்து அகமகிழ்ந்தேன். - இ.கி.ம. (21.3.22)