Posts

தமிழனின் தனிக்குணம்!

தமிழனின் தனிக்குணம்! By -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் ""உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு'' என்றான். ÷""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்து கேட்டார்.  ÷""எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா? சென்னையில் யாரிடம், எப்படிப் பேசிப் பொருள்களை வாங்குவது என்று பயந்து கொண்டிருந்தேன். அந்தச் சிரமத்தைத் தமிழ்நாடு எனக்குக் கொடுக்கவில்லை'' என்று சிரித்துக்கொண்டே கூறினான்.÷ ÷இது தமிழர்களாகிய நாம் பெருமைப்படக்கூடிய  விஷயமல்ல; வேதனைப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு வந்தாரை எப்படி வாழவைக்கிறது தெரியுமா? தன் சுயத்தை இழந்துதான்! தன் தாய்மொழிப் பற்றை மறந்துதான்! ÷சென்னை புறநகர...

நாம் அன்றாடம் பேசுவது தமிழா?

நாம் அன்றாடம் பேசுவது தமிழா? தொகுப்பு (சிவமானசா) இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணி - தமிழ்மணி 03.4.2016 பாரசீகம் - தமிழ் ஜமக்காளம் - விரிப்பு ஜமீன் - நிலபுலம் மாலுமி - நாவாயோட்டி பஜார் - கடைத்தெரு மைதானம் - திறந்தவெளித்திடல் டச்சு - தமிழ் துட்டு - காசு, பணம் பம்பளிமாசு - பேரின்னரந்தம் கக்கூஸ் - கழிப்பறை சாக்கு - கோணிப்பை பிரஞ்சு - தமிழ் பட்டாளம் - படைத்துறை பொத்தான் - பொத்தியான் ரோந்து - இரவுக்காவல் லாந்தர் - ஆடி விளக்கு பிரேசியர் - கச்சு (கச்சம்), நகிலுறை பிராகிருதம் - தமிழ் கஷாயம் - கருக்கு தம்பம் - கம்பம், தூண் துவஜஸ்தம்பம் - கொடிக்கம்பம் தம்மம் - அறம் பிக்கு, பிக்குணி - ஆண்டி விஞ்ஞாபனம் - வேண்டுகோள் விஞ்ஞானம் - அறிவியல் வேசை - பரத்தை, விலைமகள் கன்னடம் - தமிழ் எகத்தாளம் - பகடி(கேலி) செய்தல் ரகளை - கலவரம், குழப்பம் டால் - ஒளி தெலுங்கு - தமிழ் ஆஸ்தி - செல்வம் தாராளம் - மிகுதி கெட்டியாக - உறுதியாக கெலிப்பு - வெற்றி கேப்பை - கேழ்வரகு சந்தடி - இரைச்சல் சரக்கு - வாணிபப் பொருள் சாகுபடி - பயிரிடுதல் சொகுசு - நேர்த்தி சொச்சம் - மிச்சம் ச...

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

Image
அனந்தபாரதியின்  நொண்டி நாடகம்!   தினமணி - தமிழ்மணி (20.3.16) by -  இடைமருதூர் கி.மஞ்சுளா       சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதா...

நாம் அன்றாடம் பேசுவது தமிழா - 2

தினமணி - தமிழ்மணி - 27.3.2016 (தமிழ் மொழியோடு கலந்து தமிழ் போலவே வழங்கிவரும் சம்ஸ்கிருதச் சொற்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.) சம்ஸ்கிருதம் - தமிழ் அகங்காரம் - செருக்கு அதிர்ஷ்டம் - நற்பேறு அக்கிரமம் - முறைகேடு அத்தியாவசியம் - இன்றியமையாதது அநேகம் - பல அந்தரங்கம் - மறைவு அபிப்ராயம் - கருத்து அபூர்வம், அற்புதம் - புதுமை அர்த்தம் - பொருள் ஆட்சேபனை - தடை, மறுப்பு ஆரம்பம் - தொடக்கம் ஆராதனை - வழிபாடு ஆனந்தம் - மகிழ்ச்சி உற்சாகம் - ஊக்கம் உபயோகம் - பயன் கலாசாரம் - பண்பாடு கஷ்டம் - தொல்லை சங்கதி - செய்தி சதா - எப்போதும் சப்தம் - ஓசை சந்தேகம் - ஐயம் சந்தோஷம் - மகிழ்ச்சி சபதம் - சூளுரை சகஜம் - வழக்கம் சம்பந்தம் - தொடர்பு சம்மதி - ஒப்புக்கொள் சிகரம் - முகடு, மலையுச்சி, கொடுமுடி சிகிச்சை - மருத்துவம், பண்டுவம் சிகை - தலைமுடி, குடுமி, முடி சிங்கம் - அரிமா, மடங்கல் சிங்காரம் - ஒப்பனை சிசு - குழந்தை சித்தாந்தம் - கொண்முடிவு சித்தி - கைகூடுதல் சித்திரை - மேஷம் சிம்மாசனம் - அரியணை சிரஞ்சீவி - நீடுவாழ்வோன் சிரத்தை - அன்பு, அக்கறை, முயற்சி, சி...

நாம் அன்றாடம் பேசுவது தமிழா.. 1

தினமணி - தமிழ்மணி 20.3.2016 அன்றாடம் நாம் தமிழ் எனக் கருதி வேற்றுமொழியை செழிப்படையச் செய்கிறோம் என்பதை இனிமேலாவது உணர்ந்து , தமிழ்மொழியைச் பேசியும் எழுதியும் செழிக்கச் செய்வோம் ! போர்த்துக்கீசியம் -  தமிழ்   அலமாரி - நெடும்பேழை கிராம்பு -  இலவங்கம் சாவி   - திறவுகோல் சன்னல் - சாளரம் , பலகணி மேஸ்திரி - தலைமைத் தொழிலாளர் , மேற்பார்வை கடுதாசி - யிடுவோர் . பேனா - தாள் , மடல் , கடிதம் மேஜை - எழுதுகோல் மேட்டி , மிசை வராந்தா - பணிப்பலகை சங்கடம் - தாழ்வாரம் அரபி - தமிழ் தகவல் - செய்தி வக்கீல் - வழக்குரைஞர் பாக்கி - நிலுவை மக்கர் - இடைஞ்சல் மாமூல் - பழைய படி மிட்டாய் - தீங்கட்டி மராத்தி - தமிழ் கில்லாடி - கொடியோன் அபாண்டம் - வீண்பழிக்கூற்று அட்டவணை   - பொருட்குறிப்புப் பட்டியல் பேட்டை – புறநகரம் தொகுப்பு – சிவமானசா (புனைபெயர்)   (இடைமருதூர் கி.மஞ்சுளா) சொற்கள் வளரும் ... ------- இப்பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்க...

மலேசிய மண்ணில் தமிழ் மனங்கள்

Image
மலேசியாவில் 25- 29 பிப்ரவரி 2016இல்  நடைபெற்ற கோலாலம்பூர் - சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு.... அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுபது எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டன. அந்தகைய படைப்புகளுள் எனது நிம்மதி சிறுகதைத் தொகுதியும் ஒன்று. இச் சிறுகதைத் தொகுதிக்கு என் முதல் வாசகியான என் தாய்தான் அணிந்துரை வழங்கியிருக்கிறார். ஆனால், அந்த நூலைக் கண்குளிரக் காண அவர் இவ்வுலகில் இல்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறைவன் திருவடியை அடைந்துவிட்டார். அதனால், நிம்மதி என்ற சிறுகதைத் தொகுதி எழுதிய எனக்கு நிம்மதி கிடைத்ததா என்றால்........ மௌனமே பதில். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் (துணையமைச்சர்,  இளைஞர், விளையாட்டுத் துறை) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 27.2.16 அன்று மலேசியாவில் வெளியாகும்  தமிழ் நேசன் பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது. (பக்.7)  சென்னை கலைஞன் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்....

போராட்டம் இன்றித் தேரோட்டம்....

Image
போராட்டம் இன்றித் தேரோட்டம்... ÷ -இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - தமிழ்மணி (21.2.2014)  "தமிழ்' என்றால் அமிழ்து. அமிழ்து - சாகா மருந்து. அமிழ்து எனும் சொல்லைத் தொடர்ந்து கூறினால், அது "தமிழ்' ஆகும். அதனால்தான் பிங்கலந்தை நிகண்டு "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று, தமிழ் என்ற சொல்லுக்குப் பொருள் சொன்னது. உலகிலேயே வல்லோசை குறைந்த ஒரே மொழி தமிழ்தான். அதுபோல, "உலகில் பக்தியின் மொழி தமிழே' என்பார் தனிநாயகம் அடிகளார். ÷தமிழ் மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அகத்துறைப் பாடல்கள் (கர்ஸ்ங் டர்ங்ற்ழ்ஹ்), மற்றொன்று பக்திப் பாடல்கள் (ஈங்ஸ்ர்ற்ண்ர்ய் டர்ங்ற்ழ்ஹ்). தொல்காப்பிய பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இருகூறுடையதாகி அகம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் கூறுகிறது. பொருளிலக்கணம் தமிழுக்கே உரியது. ÷"பிறமொழிகள் யாவற்றினும் தான் வழங்கும் பகுதியில் உயர்வும் தகுதியும் பெற்றுப் பீடுற்று நிற்கும் மொழி, உயர்மொழி; பிறமொழிகளின் உதவியின்றித் தானே தனித்தியங்கும் தன்மையும் வன்மையு...