Posts

யாருக்கு வாக்கு?

யாருக்கு வாக்கு? by - இடைமருதூர் கி.மஞ்சுளா ÷கடந்த இரண்டு மாத காலமாகத் தமிழ்நாட்டைச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்கு வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. இன்று தேர்தல். ÷இன்று எங்கும், எதிலும் சுயநலமே தலைதூக்கி நிற்கிறது. அதுவே வெற்றியும் பெறுகிறது! ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டால் தான், தன் குடும்பம், தன் தலைமுறைகள் மட்டும் வாழ்ந்தால் போதும், மக்கள் எப்படிப்போனால் என்ன? என்ற எண்ணமே விஞ்சி நிற்கிறது. என்னதான் ஆளுங்கட்சியைப் பற்றி எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியைப் பற்றி ஆளுங்கட்சியும் குற்றப்பத்திரிகையை நாள்தோறும் வாசித்துக்கொண்டே இருந்தாலும், தங்கள் வாக்குறுதிகளை வாரி வழங்குவதில் மட்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்! வாரி வழங்கும் வாக்குறுதிகள், மக்களின் நிரந்தரமானப் பிரச்னைக்குத் தீர்வாக இல்லை. எல்லாம் தற்காலிகமானவையே! ÷தமிழ் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய நிரந்தரமானப் பிரச்னைகளைப் பட்டியலிட்டால் அவை எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டில் "தமிழ்' ஆட்சி மொழியாக இல்லை; "தமிழ்'க் கல்வி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை உள்ளிட்ட விஷயங்களில் இருக்கட்டும். அன்றாட வாழ்க்கையில்...

பாதி பாடலுக்குப் பரிசு!

Image
பாதி பாடலுக்குப் பரிசு! ÷திருப்புவனம் எனப்படும் திருப்பூவண நகரத்தில் பிறந்தவள் பொன்னணையாள். இவர் ஒரு தாசி. திருப்பூவணத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பூவணநாதர் மீது அளப்பரிய பக்தியும், அன்பும் கொண்டு அவரை வழிபட்டு வந்த சிறந்த சிவபக்தை இவள்! குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையைத் தந்தியினிடத்தில் எழச்செய்யும் யாழுக்கு இசையப் பாடும் திறம்படைத்தவள்; செந்தமிழ்ப் பாக்களை இயற்றுவதிலும் புலமை பெற்றவள். ஆடற்கலையிலும் தேர்ந்தவள். ÷கடவுளுக்கும், கடவுளது மெய்யடியார்களுக்கும் தொண்டு செய்வதிலும் சிறந்து விளங்கியவள். சிவனடியார்களைப் பற்பல மலர்களால் அருச்சித்து, அவர்களுக்குச் சுவையான அமுது செய்வித்து, எஞ்சியதை உண்பதையே  வழக்கமாக் கொண்டவள். இவள் இவ்வாறு சிறந்து விளங்கியதை, "ஆய மாதர்பேர் பொன்னணை யாளென்ப வவள்தன் நேய வாயமோ டிரவிருள் நீங்குமு னெழுந்து தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி நாய னாடி யருச்சினை நியமமு நடத்தி திருத்த பூவண வாணரைச் சேவித்துச் சுத்த நிருத்த மாடிவந் தடியாரைப் பொருளென நினையுங் கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண் அருந்தி யெஞ்சி...

தமிழனின் தனிக்குணம்!

தமிழனின் தனிக்குணம்! By -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் ""உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு'' என்றான். ÷""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்து கேட்டார்.  ÷""எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா? சென்னையில் யாரிடம், எப்படிப் பேசிப் பொருள்களை வாங்குவது என்று பயந்து கொண்டிருந்தேன். அந்தச் சிரமத்தைத் தமிழ்நாடு எனக்குக் கொடுக்கவில்லை'' என்று சிரித்துக்கொண்டே கூறினான்.÷ ÷இது தமிழர்களாகிய நாம் பெருமைப்படக்கூடிய  விஷயமல்ல; வேதனைப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு வந்தாரை எப்படி வாழவைக்கிறது தெரியுமா? தன் சுயத்தை இழந்துதான்! தன் தாய்மொழிப் பற்றை மறந்துதான்! ÷சென்னை புறநகர...

நாம் அன்றாடம் பேசுவது தமிழா?

நாம் அன்றாடம் பேசுவது தமிழா? தொகுப்பு (சிவமானசா) இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணி - தமிழ்மணி 03.4.2016 பாரசீகம் - தமிழ் ஜமக்காளம் - விரிப்பு ஜமீன் - நிலபுலம் மாலுமி - நாவாயோட்டி பஜார் - கடைத்தெரு மைதானம் - திறந்தவெளித்திடல் டச்சு - தமிழ் துட்டு - காசு, பணம் பம்பளிமாசு - பேரின்னரந்தம் கக்கூஸ் - கழிப்பறை சாக்கு - கோணிப்பை பிரஞ்சு - தமிழ் பட்டாளம் - படைத்துறை பொத்தான் - பொத்தியான் ரோந்து - இரவுக்காவல் லாந்தர் - ஆடி விளக்கு பிரேசியர் - கச்சு (கச்சம்), நகிலுறை பிராகிருதம் - தமிழ் கஷாயம் - கருக்கு தம்பம் - கம்பம், தூண் துவஜஸ்தம்பம் - கொடிக்கம்பம் தம்மம் - அறம் பிக்கு, பிக்குணி - ஆண்டி விஞ்ஞாபனம் - வேண்டுகோள் விஞ்ஞானம் - அறிவியல் வேசை - பரத்தை, விலைமகள் கன்னடம் - தமிழ் எகத்தாளம் - பகடி(கேலி) செய்தல் ரகளை - கலவரம், குழப்பம் டால் - ஒளி தெலுங்கு - தமிழ் ஆஸ்தி - செல்வம் தாராளம் - மிகுதி கெட்டியாக - உறுதியாக கெலிப்பு - வெற்றி கேப்பை - கேழ்வரகு சந்தடி - இரைச்சல் சரக்கு - வாணிபப் பொருள் சாகுபடி - பயிரிடுதல் சொகுசு - நேர்த்தி சொச்சம் - மிச்சம் ச...

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

Image
அனந்தபாரதியின்  நொண்டி நாடகம்!   தினமணி - தமிழ்மணி (20.3.16) by -  இடைமருதூர் கி.மஞ்சுளா       சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதா...

நாம் அன்றாடம் பேசுவது தமிழா - 2

தினமணி - தமிழ்மணி - 27.3.2016 (தமிழ் மொழியோடு கலந்து தமிழ் போலவே வழங்கிவரும் சம்ஸ்கிருதச் சொற்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.) சம்ஸ்கிருதம் - தமிழ் அகங்காரம் - செருக்கு அதிர்ஷ்டம் - நற்பேறு அக்கிரமம் - முறைகேடு அத்தியாவசியம் - இன்றியமையாதது அநேகம் - பல அந்தரங்கம் - மறைவு அபிப்ராயம் - கருத்து அபூர்வம், அற்புதம் - புதுமை அர்த்தம் - பொருள் ஆட்சேபனை - தடை, மறுப்பு ஆரம்பம் - தொடக்கம் ஆராதனை - வழிபாடு ஆனந்தம் - மகிழ்ச்சி உற்சாகம் - ஊக்கம் உபயோகம் - பயன் கலாசாரம் - பண்பாடு கஷ்டம் - தொல்லை சங்கதி - செய்தி சதா - எப்போதும் சப்தம் - ஓசை சந்தேகம் - ஐயம் சந்தோஷம் - மகிழ்ச்சி சபதம் - சூளுரை சகஜம் - வழக்கம் சம்பந்தம் - தொடர்பு சம்மதி - ஒப்புக்கொள் சிகரம் - முகடு, மலையுச்சி, கொடுமுடி சிகிச்சை - மருத்துவம், பண்டுவம் சிகை - தலைமுடி, குடுமி, முடி சிங்கம் - அரிமா, மடங்கல் சிங்காரம் - ஒப்பனை சிசு - குழந்தை சித்தாந்தம் - கொண்முடிவு சித்தி - கைகூடுதல் சித்திரை - மேஷம் சிம்மாசனம் - அரியணை சிரஞ்சீவி - நீடுவாழ்வோன் சிரத்தை - அன்பு, அக்கறை, முயற்சி, சி...

நாம் அன்றாடம் பேசுவது தமிழா.. 1

தினமணி - தமிழ்மணி 20.3.2016 அன்றாடம் நாம் தமிழ் எனக் கருதி வேற்றுமொழியை செழிப்படையச் செய்கிறோம் என்பதை இனிமேலாவது உணர்ந்து , தமிழ்மொழியைச் பேசியும் எழுதியும் செழிக்கச் செய்வோம் ! போர்த்துக்கீசியம் -  தமிழ்   அலமாரி - நெடும்பேழை கிராம்பு -  இலவங்கம் சாவி   - திறவுகோல் சன்னல் - சாளரம் , பலகணி மேஸ்திரி - தலைமைத் தொழிலாளர் , மேற்பார்வை கடுதாசி - யிடுவோர் . பேனா - தாள் , மடல் , கடிதம் மேஜை - எழுதுகோல் மேட்டி , மிசை வராந்தா - பணிப்பலகை சங்கடம் - தாழ்வாரம் அரபி - தமிழ் தகவல் - செய்தி வக்கீல் - வழக்குரைஞர் பாக்கி - நிலுவை மக்கர் - இடைஞ்சல் மாமூல் - பழைய படி மிட்டாய் - தீங்கட்டி மராத்தி - தமிழ் கில்லாடி - கொடியோன் அபாண்டம் - வீண்பழிக்கூற்று அட்டவணை   - பொருட்குறிப்புப் பட்டியல் பேட்டை – புறநகரம் தொகுப்பு – சிவமானசா (புனைபெயர்)   (இடைமருதூர் கி.மஞ்சுளா) சொற்கள் வளரும் ... ------- இப்பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்க...