Posts

பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள்-4

Image
பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள்-4 தைப்பூசம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் சின்னாளப்பட்டி சு.ம.பாலகிருஷ்ணனை மறக்கவே முடியாது. அவர் ஒரு வள்ளலார் பித்தர் சின்னாளப்பட்டியில் சமரச சுத்த சன்மார்க்க   அறக்கட்டளை ஒன்றை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி, அதன் மூலம் அருட்பிரகாச வள்ளலாரின் பெருமைகளை உலகறியச் செய்து வருபவர்.   இவர் அறிமுகம் கூட விசித்திரமானது. காரணம், தினமணிக்கு வந்த   ஒரு தப்பான தொலைபேசி அழைப்பின் மூலம் (ராங் நம்பர்) இவர் என்னுடன் தந்தை-மகள் முறையில் நட்பு கொண்டவர் (கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்). எனக்கு எப்போது கடிதம் எழுதினாலும், “எங்கிருந்தோ வந்தாள்…மஞ்சுளா தேவி….” என்றுதான் எழுதுவார். அதுமட்டுமல்ல…. மஞ்சுளா தேவிக்கு என்று (மகளுக்கு) அவர் சின்னாளப்பட்டியிலிருந்து வாங்கி (கொரியரில்) அனுப்பிய சின்னாளப்பட்டி சேலையில் அவரைப் போய் பார்க்க வேண்டும் என்று சின்னாளப்பட்டி சென்றிருந்தபோது எடுத்த நிழற்படம். அந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் உள்ளோர் காட்டிய அன்பு மழையில் நனைந்தேன். அவரின் நினைவு இப்போது வள்ளலார் பெருமானால் வந்திருக்கிறது…. ...

பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள் -3

Image
பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கட்டுரையாளராகவும், பத்திரிகையாளராகவும் கலந்து கொண்டபோது, தமிழறிஞர் திரு சிவத்தம்பி அவர்களுடனும், தமிழறிஞர் தமிழண்ணலுடனும், எழுத்தாளர் பொன்னீலனுடனும், கவிதாயினி ஆண்டாள் பிரியதர்ஷிணியுடனும், எழுத்தாளர் திருமதி விமலா ரமணியுடனும் பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பெரும் பேறு…..

பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள் -2

Image
முதுமுனைவர் டி.என்.ஆர். சாருடன்..... என் முனைவர் பட்ட ஆய்வுக்காக சில நூல்களைத் தேடியபோது திரு ஊரன் அடிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் உடனே, தஞ்சையில் உள்ள முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களைச் சந்திக்கச் சொன்னார். அதன்படி முதுமுனைவர் தி.ந.இரா.வை ஒரு நாள் அவர் இல்லத்தில் சந்தித்து உரையாற்றியபோது அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூல்களையும், கொடுத்த தகவல்களையும், அந்த சந்திப்பையும், முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களின் நட்பையும் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. அவர்களுக்கு   மௌனத்தால் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். மகா சிவராத்திரி (24.2.2017)   நெருங்கி வரும் இந்தத் தருணத்தில், சென்னையில் 2017-இல் நடந்த ஆன்மிகக் கண்காட்சியில் ஈஷா மையம் அமைத்திருந்த லிங்க பைரவி (கோயில்) நினைவுக்கு வந்தது. அப்போது (செல்லிடப்பேசியில்) எடுக்கப்பட்டதுதான் இது. அருகில் தி.ந.ரா.வின் உதவியாளரும் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும்.... கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன்... கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவ்வளவு எளிதாக யாரும் கண்டு பேசிவிட முடியுமா எ...