Posts

இந்தியப் பெண்மணிகள்

Image
இன்று உலக மகளிர் தினம் (8.3.2017) இந்தியப் பெண்மணிகளைப் புகழ்ந்து வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் விரிவாக ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலிருந்து சில துளிகள் மட்டும்... "ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச்சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். பரிபூரண சுதந்தரத்துடன் இருப்பவளே நிறைவான பெண்ணாக இருக்க முடியும். ÷இந்தியாவின் குடும்பத்தின் ஆதாரம் தாய், எங்கள் லட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய், எனவே தாய் எங்களுக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவுள் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே ஆவார். எங்கள் கடவுள் அறுதி நிலையிலும், தனி நிலையிலும் உள்ளவர். அறுதி நிலையில் அவர் ஆண், தனி நிலையில் அவர் பெண். இவ்வாறுதான்  "தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு' என்று நாங்கள் சொல்கிறோம். ÷தற்கால இந்துப் பெண்களின் வாழ்க்கையினுடைய மையக் கருத்து அவளுடைய கற்பு. வட்டத்தின் மையம் மனைவி; அந்த மையத்தை நிர்ணயிப்பது அவளது கற்பு. இந்தக் கருத்தை அளவுக்கு மிஞ்சி நீட்டியதே இந்து விதவைகளை...

மகளிர் தினக் கொண்டாட்டம் தேவையா ?

Image
உலக மகளிர் தினம் கொண்டாட வேண்டியவர்களா நாம்? வெட்கக்கேடு. ஒரு பக்கம் மகளிரைப் போற்றிக்கொண்டு இன்னொரு பக்கம் அவர்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்டிருக்கும் உலகம் இது. ஒரு நாளைக்கு பத்து பேருக்கு மேல் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுகின்றனர், ஒரு நாளைக்கு பத்து, பதினைந்து இடங்களில் மூதாட்டிகளின், நடுத்தர வயதுப் பெண்களின் கழுத்தை அறுத்து தங்க நகைக்ளுக்காக கொலையும், தாக்குதலும் நடக்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை…. ஒருபுறம் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன, இன்னொரு புறம் மனைவியை வெட்டிய கணவன், அம்மாவைக் கொலை செய்த குப்பன் என்ற செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், தாய்க்கும் தாரத்திற்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாதக் காமுகத் தந்தைகளின், சகோதரர்களின் குடும்பப் பாலியல் (சிறுமிகள் மீது) தொந்தரவுகள் வேறு…. இந்த லட்சனத்தில் மகளிர் தினம் கொண்டாடுவது ஒன்றுதான் குறைகிறதாக்கும்….   (ஓவியம் - தமிழ் - நன்றி: தினமணி-தமிழ்மணி) மகளிர் தினம் கொண்டாடாத காலங்களிலும் நம் பாட்டியும், பாட்டிக்க...

உலக மகளிர் தினமாமே…

Image
இன்று உலக மகளிர் தினமாமே… அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆண்டில் ஒருமுறை - ஒரு நாள் மட்டும்தானா பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள்? 365 நாள்களும் அடுக்களையை விட்டு அகலாமல், குடும்பத்துக்காக   உழைக்கும் அவர்கள் எல்லா நாளுமே போற்றப்பட வேண்டியவர்கள்தாம் என்பதுதான் இறைவனின் இன்றைய அருள் வாக்கு…. 1.    மகளிர் தினம், அன்னையர் தினம் என்றவுடன் என் நினைவில் வருபவர் முதலில் என் தாய், என் தாய் மட்டும்தான். அவர் எனக்குக் கடைசியாக (முனைவர் பட்ட ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது) தயாரித்துக் கொடுத்த தேநீர் இது. அந்த அன்புத் தேநீர், அன்று வாய்க்கு ருசி தந்து, வயிற்றுக்கு இதம் தந்தது. இன்று என் மனத்தை பாரமாக்கிக் கண்களில் கண்ணீர் தருகிறது.  (என் தாயின் அன்பாலும் பாசத்தாலும் நிறைந்த தேநீர் இது) 2.      அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு. தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன், தின இதழ், கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் முதலிய நாளிதழ்களில், வார இதழ்களில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு, பெண் பைலட் ...

பிரபலங்களோடு சில நினைவுகள்-5

Image
1.  மாணிக்கவாசகர் குருபூஜை நாளன்று, காவிரிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது,  திருவாசகம் திருப்பாண்டிப்பதிகம் நூலை வெளியிட்டு சிறப்பு செய்த  (காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த தம்பிரான் சுவாமிகள். 2.  சின்ன காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற திருமுறை  நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது  தம்பிரான் சுவாமிகளிடம் திருநீறு பெறுதல். 3. சென்னை, குமரன் குன்றம் திருக்கோயிலில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நூல் வெளியிட்டு சிறப்பித்தது. 4. தமிழறிஞர் தமிழ்ப் பெரியசாமி எங்கள் அலுவலகம் வந்திருந்தபோது (2009) அவருடன் எடுத்துக்கொண்ட நிழற்படம்.

திருவாசகத்தில்...

Image
இது என் இளம் முனைவர் பட்ட ஆய்வேடு (நூல்). இந்நூலுக்கு என் இளைய சகோதரி கி.உமா வரைந்த (மணிவாசகர் குறிப்பிடும் மகளிர் ஆடும் விளையாட்டுகள் குறித்த ஓவியங்கள்) அழகுக்கு அழகு சேர்த்தன. அவருக்கு என் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

நாடோடிக் கதைகள்

Image
  ஆன்மிகத் தலைப்பாக இருந்ததாலோ என்னவோ (ஞானத்தின் வாயில்- யாருக்கும் பிடிக்கவில்லை போலும்) வடமொழி (தமிழில் நான் மொழிபெயர்த்த) நாடோடிக் கதைகள் அடங்கிய இந்நூலுக்கு நூலக ஆணை (கிடைக்க வைப்பது குதிரைக் கொம்பாயிற்றே….) கிடைக்கவில்லை.  அதுமட்டுமல்ல இதை நானே பதிப்பித்து கையைச் சுட்டுக்கொண்டேன்.   இந்நூல் தினமணியில் புத்தக விமர்சனப் பகுதியில் இடம்பெற்று அதைப் பலரும் கேட்டும் கொடுக்க முடியவில்லை…..சில பிரதிகளே அச்சிடப்பட்டன. அவற்றுள் தற்போது ஓரிரு பிரதிகளே மிச்சம். இந்நூலின் சிறப்பு, என் தாய் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது, அடியேன் தாய்க்கு ஒரு கவிதை எழுதியது....

சிறுவர் சிறுகதை - தினமணி சிறுவர்மணி

Image
சில மாதங்களாக செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அனைவரும் எப்படி அவதிப்பட்டோம். அதை மறக்க முடியுமா? ஆனால், செல்லாத காசை (தாய்-தந்தை தந்தது) சேர்த்து வைத்திருந்த நான், அதைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு செல்லும் காசாக மாற்றிய அற்புதம் தினமணி-சிறுவர்மணியில் எழுதிய “செல்லாக்காசு” எனும் சிறுவர் சிறுகதையால் நிகழ்ந்தது. ஆம்… அந்தச் செல்லாக்காசு சிறுகதை சாகித்ய அகாதெமியினரால் தேர்வு செய்யப்பட்டு,   செல்லும் காசாகி, இன்று எனக்கு அக்கதைக்கான தொகை காசோலையாக வந்துள்ளதை நினைத்து, சிறுவர் இலக்கியத்திற்காக நான் வாங்கிய சாகித்ய அகாதெமி விருது என்றே அகமகிழ்கிறேன். சாகித்ய அகாதெமிக்கு என் மனமார்ந்த நன்றி…நன்றி…நன்றி… கூடவே முனைவர் சொ. சேதுபதி அவர்களுக்கு, முனைவர் இரா.காமராசு அவர்களுக்கும்…