Posts

இனியாவது விழித்துக் கொள்வோமே…

நட்பு வட்டங்களே… இனியாவது விழித்துக் கொள்வோமே… இன்ப அன்புடனும் நட்புடனும்… இடைமருதூர் கி.மஞ்சுளா எல்லா காலங்களிலும் எல்லா தீமைகளுமே நமக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. குறிப்பாக, கரோனா நோய்த் தொற்று நமக்குப் புகட்டிய பாடங்கள் ஏராளம்… அதைக் கற்றதுடன் நிற்காமல் “நிற்க அதற்குத் தக” என்கிற திருவள்ளுவரின் குறளை (குரலை) செவிமடுத்து நடப்பது மிக மிக அவசியம். ஊரடங்கு அடங்கிய பிறகு உலக மக்கள்… குறிப்பாக நம் இந்திய மக்கள் (மட்டுமாவது) கடைப்பிடிக்க வேண்டிய 5 கட்டளைகள் அல்ல இவை. எதிர்காலத்தில் இந்தியா ஆரோக்கியமாகவும் செழுமையாகவும், வல்லரசாகவும் திகழ - இருக்க   வேண்டும் என்றால்… உடன்பிறவா சகோதரியான ஒருத்தி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் 5 வேண்டுகோள் இவை. யாதும் ஊரே… யாவரும் கேளிர்….(கேளீர்-கேளுங்கள்) என்பது உண்மையானால்…… 11.     ஊடரங்கு தளர்த்தப்பட்டு,,, எல்லாக் கடைகளும் திறந்தவுடன் உடனே ஜவுளிக்கடைக்கும், நகைக்கடைக்கும், பிற அழகு சாதனப் பொருள்களை வாங்கவும் படையெடுப்பதைத் தவிர்க்கவும். இது முக்கியமாகப் பெண்களுக்குத்தான். ஆண்களின் (கணவரின்) வரும...

(கரோனா) ஆபத்துக்கு உதவும் பயனாடைகள்

Image
ஆபத்துக்கு உதவும் பயனாடைகள் - இ.கி.ம. முகக் கவசம் தட்டுப்பாடு… பலரும் கைக்குட்டையைத்தான் கட்டிக் கொண்டு அலுவலகத்தில் பணியாற்றுகிறோம். சென்ற ஆண்டு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒருசிலர் எனக்குப் போர்த்திய பயனாடைகள்தான் (கதர் துண்டு) (பயன்படாத பொன்னாடை அல்ல) இப்போது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு முகத்தை மறைத்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படிப் பயன்படாத விலை அதிகமுள்ள பொன்னாடைகள் பல என் வீட்டு லேஃப்ட்டில் கிடக்கின்றன. ஆனால், குறைந்த விலையில் கிடைக்கும் பயனாடைகள் (வெள்ளை கதர் துண்டுகள்) இப்போது (கரோனா நோய்த் தொற்றுக்கு) ஆபத்துக்கு உதவுகிறது… நட்பு வட்டங்களே…   தயவு செய்து இனி நிகழ்ச்சிகளில் கௌரவம் கௌரவம் என்று நினைத்து பொன்னாடைப் போத்துவதைத் தவிர்த்து பயனாடை அணிவியுங்கள். அவர்களுக்கு அது உதவும்போது… உங்களை அவர் மனமும் வாயும் வாய்த்தும். இ.கி.ம.

ஆசார கோவை- புறம்தள்ளியதால் புலம்புகிறோம்- தினமணி-தமிழ்மணி

Image
முதல் பதிப்பு- தினமணி தமிழ்மணி 5.4.2020 -கட்டுரையாளர் மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா)

சுதந்திரம் சும்மா... கிடைத்துவிடவில்லை...

Image
சுதந்திரம் சும்மா... கிடைத்துவிடவில்லை... சென்ற ஆண்டு (9 முதல் 12 வரை 2019) இதே நாள்.. அந்தமானில் இருந்தது மறக்க முடியாத நிகழ்வு… இந்த அற்புத வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் மூத்த சகோதரி கே.விஜயலெட்சுமிக்கு என் இன்ப அன்புடன் கூடிய நன்றிகள் பல… இன்று மட்டுமல்ல… என்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது அந்தமானின் அற்புதக் காட்சிகள்…. அந்தமானில் இறங்கியவுடனேயே செல்லுலர் சிறைக்குச் சென்றதும் மனம் இறுகிப்போய் கண்கள் குளமாயின….நாட்டின் சுதந்திரத்திற்காக அந்தச் சிறையில் எத்தனை விதமான துன்பங்கள் அடைந்தனர் நம் வீரர்கள்… தியாகிகள்… குறிப்பாக தியாகி… சாவர்கர். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையை மட்டுமல்ல… இன்றைய சிறுவர்களும்.. இளைஞர்களும் அவசியம் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமான் சிறையைப் பார்வையிட வேண்டும்… அப்போதுதான் புரியும் நமக்குக் கிடைத்த சுதந்தரத்தின் அருமை பெருமைகள்…

கையெழுத்தில் திருவாசகம் - இடைமருதூர் கி.மஞ்சுளா (மணிவாசகப்பிரியா)நூல் (மானசீக) வெளியீடு

Image
8.3.2020 மகத்தான ஒரு நன்னாள்... என் வாழ்வில் ஒரு பொன்னாள்... மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை, நங்கைநல்லூர் சிவநேயப் பேரவையின் சார்பில் நடந்த மகளிர் விழாவில் சாதனை மகளிருக்கான விருதை வழங்கி கௌரவுக்கும் ( இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பேரவையில் " விருது பெற்ற நானும் , திருமதி வான்மதி அவர்களும் ) பெரும் பேறு கிடைத்தது . இந்நிகழ்ச்சில் ஸ்ரீலஸ்ரீ வாதவூரடிகளார் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி அற்புதமாக நடைபெற்றது . கூடவே ... இந்த ஆண்டில் இறைவன் என் பொருட்டு நிகழ்த்திய ஓர் அற்புதத்தையும் அவர் திருமுன்பாகப் பதிவு செய்ய முடிந்தது என் பாக்கியம் . கடந்த 2019 டிசம்பரில் பட்டாபிராமில் நடந்த திருவாசக நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரு . அருளரசு அவர்கள் திருவாசத்தைப் பற்றிக் கூறும்போது... இறைவன் எவ்வளவு கஷ்டப்பட்டு அதை எழுதியிருப்பார் .... நாம் தினமும் ஒரு பதிகத்தையாவது பாட வேண்டும்... கைப்பட எழுதிப் பார்க்க வேண்டும் என்று கூறினார். அதன் மூலம் திருவருள் அவருள்ளிருந்து எனக்கு எழுதும் ஊக்கத...