Posts

எம்மதமும் சம்மதம்- தினமணி - சிறுவர்மணி

Image
தினமணி-சிறுவர் மணி பிஞ்சுக்கை ஓவியத்துக்கு ஒரு சின்னஞ்சிறு கதை -இடைமருதூர் கி.மஞ்சுளா

https://www.youtube.com/watch?v=lnAidRQtvaY

https://www.youtube.com/watch?v=lnAidRQtvaY

https://www.youtube.com/watch?v=6vB4GNHYt4c

https://www.youtube.com/watch?v=6vB4GNHYt4c

முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் (திங்கள்20.7.2020) காலமான செய்தி

Image
தள்ளிப்போடுவது ஆபத்தானது தூங்கி எழுந்தால்…. யார் இருக்கிறார்கள், யார் நம்மிடம் சொல்லாமல் போனார்கள் என்பதை தொலைக்காட்சியையோ, கட்செவி அஞ்சலையோ,   முகநூலையோ, பத்திரிகையையோ பார்த்தும், கேட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டிய கொடுமையான (2020) ஆண்டில் ( காலகட்டத்தில் மனித இனம்) நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்…. இன்று வழக்கம்போல (21.7.2020) தினமணி பத்திரிகையைப் பிரித்ததும்… முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் (திங்கள்) மறைந்த செய்தி. மிகுந்த அதிர்ச்சி. அவர் இறையடி சேர்ந்துவிட்டார். இவர் குறித்து எங்கள் ஆசிரியர் (கலாரசிகன்) பல முறை எழுதியிருக்கிறார். ஆனால், அவரது அறிமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியப் பயணத்தில் வாய்த்தது. எழுத்தாளர்கள் 50 பேரின் படைப்புகளை மலேசிய அரசின் ஆதரவுடன் வெளியிட்டு மகிழ்ந்த (கலைஞன் பதிப்பகம்) அந்தத் தருணங்கள் என்றும் இனிமையானவை. கலைஞன் பதிப்பகத்துக்கு நன்றி… இந்தப் பயணத்தில் என்னுடன் என் செல்ல மகளும், என் தோழி மகேஸ்வரியும் இருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அதை வார்த்தைகளால் வடிக்க முடியாது… அந்தப் பயணத்தில்தான் எத்தனை...

இடைமருதூர் கி.மஞ்சுளாவின் நூல்கள் சில...

Image

தினமணி- தமிழ்மணி- தேவேந்திரநாத பண்டிதரின் வைத்தியக் குறள் - மணிவாசகப்பிரியா

Image
தினமணி- தமிழ்மணி- 5.7.2020 தேவேந்திரநாத பண்டிதரின் வைத்தியக் குறள் மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா)

தினமணி - சிறுவர் மணி பிஞ்சுக் கை ஓவியத்துக்கான கதை... அச்சம் தவிர்

Image
அச்சம் தவிர் (சிறுகதை) (30.5.2020) -மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா) இக்கதைக்கான வழக்குரைஞர் கோ.மன்றவாணன் அவர்களின் திறனாய்வுக் கடிதத்தைப் பாருங்கள். அற்புதமாகத் திறனாய்ந்திருக்கிறார். ----------- பெறுநர் : தமிழ்மிகு இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள் (மணிவாசகப்பிரியா)   மேன்மைமிகு அம்மா, வணக்கம். இன்றைய சிறுவர் மணியில் தாங்கள் எழுதிய அச்சம் தவிர் என்ற கதையைப் படித்தேன். கரோனா என்னும் அச்சம் சூழ்ந்த காலத்தில் வாழ்கிறோம்.  இக்காலத்தில் அச்சம் தவிர்க்கும் எண்ணத்தை வளர்க்கும் தங்கள் கதை தேவையான ஒன்று. குழந்தை வரைந்த படத்துக்குப் பொருத்தமாகக் கதை சொல்லி உள்ளீர்கள். ஒரு நிகழ்வில் இருந்து கதையைக் கண்டறிவது எளிது. ஒரு படத்தில் இருந்து கதையை உருவாக்குவது எளிது இல்லை. ஆனால் உங்களுக்கு எளிதாக உள்ளது. தங்கள் கதை சொல்லும் பாடங்கள் : 1. அச்சம் தவிர்த்தல் 2. இடர்மிகுந்த நேரத்தில் எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்தல் 3. உயிர்களிடத்தில் அன்பு வைத்தல் (பாம்பு ஆனாலும் அதைக் கொல்லாது இருத்தல்) கதையின் இறுதி வரி என்னைக் கவர்ந்தது. வேலுவும் பாலுவும் ஓடிப்போய் அம்மாவை இறுக...