Posts

தந்தையர் தினத்தன்று பி.வி.ஆர் சாரிடம் ஆசீர்வாதம்...

Image
தந்தையர் தினத்தன்று (19.6.2022) குழந்தை இலக்கியச் செல்வர் புதுகை பி.வெங்கட்ராமன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தும், அவரிடம் ஆசி பெற்றதும் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அப்போது அவர் பூவண்ணன் எழுதிய சிறுவர் இலக்கியச் சிறப்புகள் நூலை எனக்குப் பரிசாக அளித்தார்.

மக்கள் டி.வி. என் ஜன்னலுக்கு வெளியே இடைமருதூர் கி.மஞ்சுளாவின் இரு நூல்கள் வெளியீடு

Image
இடைமருதூர் கி.மஞ்சுளாவின் இரு நூல்கள் வெளியீடு https://youtu.be/D8D9dBczUvA

இடைமருதூர் கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வு -"மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்" நூல் வெளியீடு- எழுத்துச் சிற்பி - விருது

Image
முனைவர் பட்ட நூல் வெளியீடு, அறிமுக உரை. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு வட்டார நூலகம், ஆழ்வார்பேட்டை வாசகர் வட்டம் மற்றும் மணிவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்திய இடைமருதூர் கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வான “மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்” என்கிற நூல் வெளியீடும், அப்பா ஓர் அவதாரம் எனும் நூல் அறிமுக விழாவும் (5.6.2022) பலருடைய ஆசிரிவாதத்தோடு இனிதே நடைபெற்றது. அழைப்பிதழில் உள்ளபடி இல்லாமல் சில மாற்றங்களோடு இந்நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்த இடைமருதூர் கி.மஞ்சுளாவின் டாக்டர் பட்ட ஆய்வு “மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்” என்ற நூல் அறிஞர்கள் பலர் முன்னிலையில் எதிர்பார்த்ததைவிட அற்புதமான - நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அமைந்தது இறைவனின் திருவருள்தான். பேராசிரியர் திரு.இராம. குருநாதன் அவர்கள் தலைமையிலும், புதுகை தருமராசன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குழந்தைக் கவிஞர் திரு அழவள்ளியப்பா அவர்களின் திருமகள...

மங்கையர் சோலை-பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பு (14.5.2022- 21.5.2022)

Image
பொதிகை தொலைக்காட்சியில் மங்கையர்ச் சோலை நிகழ்சியில், விருந்தினராக நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் பங்கேற்றார். சாதனை மகளிர் நான்கு பேருடன் நானும் ஒரு சாதனைப் பெண்ணாக... அதிலும் "தலைசிறந்த எழுத்தாளர்" என்கிற... நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. விஜய கிருஷ்ணன் அவர்களின் அறிமுகவுரையுடன் அறிமுகமாகிப் பங்கேற்றது மறக்க இயலாத இன்ப நினைவுகள். பொதிகை தொலைக்காட்சிக்கு என் நன்றி. என்னுடைய படிப்பு... எழுத்துப் பயணம், பத்திரிகை பயணம் தொடங்கிய விதம் குறித்தும், என் நூல்கள் செய்த மிகப்பெரிய திருப்புமுனைகள், மறக்க முடியாத அனுபவம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது அதைவிட மகிழ்ச்சியைத் தந்தது. இதன் முதல் பகுதியைப் பார்த்து வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்கள், அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. வரும் வாரம்தான் (21.5.22 இரவு 9 மணி) இந்நிகழ்ச்சி (ஐந்து பெண்களின்) அதிக சூடுபிடிக்கும்படி இருக்கும்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள் வாசகர்களே... -இன்ப அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா...

சிறுவர் (அட்டைப்படக் கதை) கதை- சிறு பழத்து ஒரு விதை (தினமணி-சிறுவர்மணி)

Image
சிறுவர்மணி 16.4.2022 சிறு பழத்து ஒரு விதை- சிறுகதை மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா)

மகளிர் தின விழாவில் சாதனை மகளிரை கௌரவிக்கும் நிகழ்ச்சி 23.3.2022

Image
மகளிர் தின விழாவில் சாதனை மகளிரை கௌரவிக்கும் நிகழ்ச்சி 23.3.2022 இந்நிகழ்ச்சியில் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "சக்திச் சுடர்" விருது தரப்பட்டது. (இந்நிகழ்ச்சி குறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு பொதிகை மின்னல் இதழும், புதுவைத் தென்றல் இதழும் பெருமைப்படுத்தியிருக்கின்றன.

நாயன்மார்கள் நாட்டிய வரலாறு அரங்கேற்றம்- சென்னை பாடி திருவலிதாயம்

Image
சென்னை 24.4.2022 ஞாயிற்றுக்கிழமை சென்னை, பாடி திருவலிதாயம் சிவன் கோயிலில் நாயன்மார்கள் குறித்து 7 நாள்கள் தொடர்ந்து நடந்த நாட்டிய நாடக விழாவின் இறுதி நாளில் (24.4.2022) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். கண்கொள்ளாாக் காட்சியான இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன்... இதில் பங்கேற்று நடித்த ஒவ்வொருவரும் தெய்க் குழந்தைகள் என்றே கூறலாம். கருவிலே திருவான நாயன்மார்களைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய நிகழ்ச்சி இது.. இதைத் தொடர்ந்து நடத்திவரும் திரு. முத்துராமலிங்கம் ஐயாவை இரண்டாவது சேக்கிழார் என்றே போற்றி வணங்குகிறேன்... தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது.