Posts

Showing posts from January 4, 2015

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்! By dn First Published : 02 January 2015 02:53 PM IST "இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு. இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார். கந்தபுராணத்தினுள் "சிவரகசியம்' என்ற ஒரு பகுதி உள்ளது. இதற்குச் "சிவரகசிய கண்டம்' என்று பெயர். இதிகாசங்களிலேயே மிகவும் உயர்ந்தது லட்சம் கிரந்தங்களைக் கொண்ட பரமேதிகாசம். அதுதான் சிவரகசியம். ஆனால், சிவரகசியம் என்ற நூலின் தலைப்புக்கேற்ப அந்த இதிகாசம் இன்றுவரை ரகசியமாக, சமயக் காழ்ப்புணர்ச்சியாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, இராமாயணத்தையும் மகாபாரதத்தையுமே குறிப்பிடும்படியாக மக்களின் மனங்களையும் அறிவையும் மழுங்கச் செய்துவிட்டனர் பிற மதத்து - சமயத்துப் பெரி(சிறி)யோர்! அதனால் அது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது. சைவத்தின் பெருமையை உண்மைகளைக