Posts

Showing posts from April 17, 2016

தமிழனின் தனிக்குணம்!

தமிழனின் தனிக்குணம்! By -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் ""உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு'' என்றான். ÷""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்து கேட்டார்.  ÷""எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா? சென்னையில் யாரிடம், எப்படிப் பேசிப் பொருள்களை வாங்குவது என்று பயந்து கொண்டிருந்தேன். அந்தச் சிரமத்தைத் தமிழ்நாடு எனக்குக் கொடுக்கவில்லை'' என்று சிரித்துக்கொண்டே கூறினான்.÷ ÷இது தமிழர்களாகிய நாம் பெருமைப்படக்கூடிய  விஷயமல்ல; வேதனைப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு வந்தாரை எப்படி வாழவைக்கிறது தெரியுமா? தன் சுயத்தை இழந்துதான்! தன் தாய்மொழிப் பற்றை மறந்துதான்! ÷சென்னை புறநகர