Posts

Showing posts from May 21, 2017

“சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”

Image
காலம் அறிந்து கூவியுள்ள சேவல் கவிஞர் மயிலாடுதுறை இளைபாரதியின் ஓர் அற்புதமான நூல், “சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”  கன்னிக்கோயில் இராஜா அவர்கள் என்னைக் கை காட்ட, உடனே அவர் எனக்கு இந்நூலை அன்பளிப்பாக அனுப்பி ஒருமாதம் ஆகிறது. உடனே படித்து, பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டேன். என்றாலும், உடனே அவர் நூலுக்கு மதிப்புரை தரமுடியவில்லை. இந்நூலை ஒவ்வொரு பெற்றோரும் முதலில் படிக்க வேண்டும். அடிக் கோடிட்டதில் சில துளிகள்….உங்கள் பார்வைக்கு… 1.    நேரத்தின் அருமையை எடுத்துச் சொல்லி குழந்தைகளை உணரச் செய்ய வேண்டும். காலத்தின் அருமையை எவரொருவர் தன் இளமைக் காலத்திலேயே தெரிந்து கொள்கிறார்களோ, அவர்கள்தான் வாழ்க்கையில் எதை, எப்போது செய்ய வேண்டும் என்கின்ற உணர்வினைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களால்தான் சாதனை வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும். “போகும் காலம் திரும்ப வராது” என்று அவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையல்லவா…? 2.    படிப்புக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. நிறைய படித்தவர்கள் கூட நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் க