Posts

Showing posts from February 21, 2016

போராட்டம் இன்றித் தேரோட்டம்....

Image
போராட்டம் இன்றித் தேரோட்டம்... ÷ -இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - தமிழ்மணி (21.2.2014)  "தமிழ்' என்றால் அமிழ்து. அமிழ்து - சாகா மருந்து. அமிழ்து எனும் சொல்லைத் தொடர்ந்து கூறினால், அது "தமிழ்' ஆகும். அதனால்தான் பிங்கலந்தை நிகண்டு "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று, தமிழ் என்ற சொல்லுக்குப் பொருள் சொன்னது. உலகிலேயே வல்லோசை குறைந்த ஒரே மொழி தமிழ்தான். அதுபோல, "உலகில் பக்தியின் மொழி தமிழே' என்பார் தனிநாயகம் அடிகளார். ÷தமிழ் மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அகத்துறைப் பாடல்கள் (கர்ஸ்ங் டர்ங்ற்ழ்ஹ்), மற்றொன்று பக்திப் பாடல்கள் (ஈங்ஸ்ர்ற்ண்ர்ய் டர்ங்ற்ழ்ஹ்). தொல்காப்பிய பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இருகூறுடையதாகி அகம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் கூறுகிறது. பொருளிலக்கணம் தமிழுக்கே உரியது. ÷"பிறமொழிகள் யாவற்றினும் தான் வழங்கும் பகுதியில் உயர்வும் தகுதியும் பெற்றுப் பீடுற்று நிற்கும் மொழி, உயர்மொழி; பிறமொழிகளின் உதவியின்றித் தானே தனித்தியங்கும் தன்மையும் வன்மையு