Posts

Showing posts from July 3, 2016

பிரபஞ்சப்போர்

Image
 பிரபஞ்சப்போர் - தினமணி - வெள்ளிமணி (08.7.2016) கட்டுரையாளர்: இடைமருதூர் கி.மஞ்சுளா இறைவனை முதன் முதலாகக் கண்ணால் கண்டு களித்து மகிழ்ந்தவர். மணிவாசகர் தேவார மூவர்க்கும் முன்னவர் என்பதற்காக சான்றுகள் அனைத்தும் உறுதியாக உள்ளதால், இவரே இறைவனை முதன் முதலில் கண்ணால் கண்டவர் என்பது உண்மை.  மாணிக்கவாசக சுவாமிகள்தான். இறைவனை அம்மையப்பனாக, உமையொருபாகனாக அவர் கண்ட காட்சியைத் திருவாசகத்தில் பல இடங்களில் அகச்சான்றாகவே பதிவு செய்துள்ளார். அந்த அம்மையப்பரைக் காணவும், அவ்விறைவனின் திருவடியை அடைந்து, மீண்டும் பிறவா வரம்பெற்று, பேரின்பப் பெருநிலை பெறுவதற்கும் ஒரேவழி அன்புவழி(நெறி) ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தியவர் அவர். மணிவாசகர் கூற, இறையவனால் எழுதப்பட்ட முதன்மை நூலும் முதல் நூலுமாகும் திருவாசகம். இச்சிறப்பு வேறு எந்த பக்தி இலக்கியத்திற்கும் கிடையாது.   அன்புநெறியில் அமைந்த அன்பு நூலான திருவாசகத்தின் 46ஆவது பதிகமான திருப்படையெழுச்சியில் உள்ள இரு பாடல்கள் மூலம் அவர், பக்தர்களையும், சித்தர்களையும், தொண்டர்களையும், யோகிகளையும் ஒரு போருக்குப் புறப்படச் சொல்கிறார். அது என்ன போர் தெரியு

பிரபந்த தீபிகையில் பதினெண்கீழ்க்கணக்கு - தமிழ்மணி

Image
பிரபந்த தீபிகையில் பதினெண்கீழ்க்கணக்கு By - இடைமருதூர் கி . மஞ்சுளா சங்கத் தொகை நூல்களுள் பதினெண்கீழ்க்கணக்கும் ஒன்று . பதினெட்டு நூல்களின் தொகுப்பு . கீழ்க்கணக்கு நூலின் இலக்கணம் பற்றி பன்னிருபாட்டியல் இரு (346, 348) நூற்பாக்களில் குறிப்பிடுகிறது . நாம் செய்யும் வினைகளை எப்படி எப்படிச் செய்து வருகிறோம் என்பதற்கு இறைவன் முறையான கணக்கு ( பட்டோலை ) எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதை , "" தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது , காமுற்று , அரற்று கின்றாரையும் , பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே '' என்று கூறும் அப்பரடிகள் , " கீழ்க்கணக்கு ' என்ற சொல்லை தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார் . அப்பரடிகளின் பாடல் சிவபெருமான் பட்டோலை தீட்டுகிறான் என்பதையும் , உயிர்கள் அனைத்தின் கணக்கையும் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது . " பட்டோலை ' என்பது பொதுவாக அரசர் விடும் திருமுகத்தையே குறிக்கும் . ஆனால் ,

தன்னம்பிக்கையே முதலீடு...வெற்றியே இலக்கு - நேர்காணல்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
தன்னம்பிக்கையே முதலீடு ... வெற்றியே இலக்கு ! சொல்கிறார் : எஸ் . ஜெயலட்சுமி  ' அபாகஸ் ' கணக்குப் பயிற்சியைக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களுள் ஒன்றுதான் " ஹர்ஷா அகாடமி '. சென்னை கொரட்டூரில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ் . ஜெயலட்சுமி , கல்லூரியில் படிக்கும்போதே மாநில அளவில் விருது பெற்றவர் . தற்போது , இந்நிறுவனத்தை நன்முறையில் நடத்தி வருவதற்காகவும் , நல்ல பயிற்சியாளராக இருப்பதற்காகவும் IQMA INSTITUTE, இவருக்கு 2015 இல் விருதையும் பொற்காசையும் வழங்கியுள்ளது . அவரிடம் பேசியபோது :   இந்நிறுவனம் தொடங்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது ?  ÷ நான் பி . காம் ( அக்கவுண்ட்ஸ் , காமர்ஸ் ) படித்துவிட்டு , கல்லூரி காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு டி . சி . எஸ் நிறுவனத்தில் சீனியர் பிராசஸ் அசோசியேட்டாகப் பணிபுரிந்து வந்தேன் . எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தபிறகு , என் மகளைப் பார்த்துக்கொள்ள முடியாததால் என் வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டது . அச்சமயம் , என் கணவ