Posts

Showing posts from April 12, 2020

இனியாவது விழித்துக் கொள்வோமே…

நட்பு வட்டங்களே… இனியாவது விழித்துக் கொள்வோமே… இன்ப அன்புடனும் நட்புடனும்… இடைமருதூர் கி.மஞ்சுளா எல்லா காலங்களிலும் எல்லா தீமைகளுமே நமக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. குறிப்பாக, கரோனா நோய்த் தொற்று நமக்குப் புகட்டிய பாடங்கள் ஏராளம்… அதைக் கற்றதுடன் நிற்காமல் “நிற்க அதற்குத் தக” என்கிற திருவள்ளுவரின் குறளை (குரலை) செவிமடுத்து நடப்பது மிக மிக அவசியம். ஊரடங்கு அடங்கிய பிறகு உலக மக்கள்… குறிப்பாக நம் இந்திய மக்கள் (மட்டுமாவது) கடைப்பிடிக்க வேண்டிய 5 கட்டளைகள் அல்ல இவை. எதிர்காலத்தில் இந்தியா ஆரோக்கியமாகவும் செழுமையாகவும், வல்லரசாகவும் திகழ - இருக்க   வேண்டும் என்றால்… உடன்பிறவா சகோதரியான ஒருத்தி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் 5 வேண்டுகோள் இவை. யாதும் ஊரே… யாவரும் கேளிர்….(கேளீர்-கேளுங்கள்) என்பது உண்மையானால்…… 11.     ஊடரங்கு தளர்த்தப்பட்டு,,, எல்லாக் கடைகளும் திறந்தவுடன் உடனே ஜவுளிக்கடைக்கும், நகைக்கடைக்கும், பிற அழகு சாதனப் பொருள்களை வாங்கவும் படையெடுப்பதைத் தவிர்க்கவும். இது முக்கியமாகப் பெண்களுக்குத்தான். ஆண்களின் (கணவரின்) வருமானத்தை நல்ல வழ

(கரோனா) ஆபத்துக்கு உதவும் பயனாடைகள்

Image
ஆபத்துக்கு உதவும் பயனாடைகள் - இ.கி.ம. முகக் கவசம் தட்டுப்பாடு… பலரும் கைக்குட்டையைத்தான் கட்டிக் கொண்டு அலுவலகத்தில் பணியாற்றுகிறோம். சென்ற ஆண்டு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒருசிலர் எனக்குப் போர்த்திய பயனாடைகள்தான் (கதர் துண்டு) (பயன்படாத பொன்னாடை அல்ல) இப்போது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு முகத்தை மறைத்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படிப் பயன்படாத விலை அதிகமுள்ள பொன்னாடைகள் பல என் வீட்டு லேஃப்ட்டில் கிடக்கின்றன. ஆனால், குறைந்த விலையில் கிடைக்கும் பயனாடைகள் (வெள்ளை கதர் துண்டுகள்) இப்போது (கரோனா நோய்த் தொற்றுக்கு) ஆபத்துக்கு உதவுகிறது… நட்பு வட்டங்களே…   தயவு செய்து இனி நிகழ்ச்சிகளில் கௌரவம் கௌரவம் என்று நினைத்து பொன்னாடைப் போத்துவதைத் தவிர்த்து பயனாடை அணிவியுங்கள். அவர்களுக்கு அது உதவும்போது… உங்களை அவர் மனமும் வாயும் வாய்த்தும். இ.கி.ம.