Posts

Showing posts from April 13, 2014

ராதா நாமம் சொல்லிக் கொடுத்தேன்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்! (தினமணி வெள்ளிமணியில் வெளியான கட்டுரை) ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை "கோகுலாஷ்டமி' என்று கொண்டாடி வருகிறோம். கண்ணனின் அவதார நோக்கமும் தத்துவமும் பற்றி அறிந்து கொண்டால், கண்ணனின் பிறப்பு சில பாடங்களைத் தரும். கண்ணனும் நீலவண்ணமும்: கண்ணன், கார்மேக வண்ணன், நீலநிறவண்ணன் என்று வர்ணிக்கப்படுகிறார். எங்கும் நிறைந்து பரந்து விரிந்திருப்பதற்குத் தோற்றத்தளவில் நீலநிறம் வருவது இயல்பு. அது அறிவியல் தொடர்புடையதும்கூட. மலை, கடல், வெட்டவெளி போன்றவற்றில் தென்படுகின்ற இயற்கை போன்று, தென்படாத பரம புருஷன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதுதான் கிருஷ்ணனின் நிறத்துக்கான தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு "சர்வ வியாபி... (எங்கும் நீக்கமற நிறைந்தவன்') என்று பொருள். அவதாரம் தேவையா? ""அவதாரம் எடுக்காமலேயே நான் எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு உயிரினத்தின் மேல் உள்ள அன்பின் காரணமாக நான் அவதாரம் எடுக்கிறேன். பூமியில் அவதாரம் எடுக்கும்போது, என்னை தரிசனம் செய்வதால், அவர்கள் மனக்குறை தீர்க்கப்படுகிறது. என்ன

தமிழ் முக்தி இன்பம்

தமிழ் - முத்தி இன்பம்! ÷"இன்பம்' என்பது இல்லாத ஒரு பொருளன்று. அது ஆன்ம உணர்வுக்குப் பொருள் (விஷயம்) ஆவதுதான். இன்பம் என்பது ""எல்லாம் அற என்னை இழந்த நலம்'' (கந்தரநுபூதி) ஆகும். எல்லாம் அற்ற இடத்துக்குப் "பாழ்' என்று ஒரு பொருளுண்டு. ""முப்பாழும் பாழாய், முடிவில் ஒரு சூனியமாய், அப்பாழும் யாழ் என்றறி'' என்னும் தொடர் மூன்று மலப் பொருள்களும் (ஆணவம், கன்மம், மாயை) பாழாகி, ஆன்மாவும் இல்லாததாகி, அப்பொருளதாகிய சிவமும் தோன்றாத, இன்பநிலை என்பதை அறிவாயாக என்று பொருள்படும். "பாழ்' என்னும் சொல்லில் உள்ள "ழ' கரத்துக்கே "இன்பம்' (ஆனந்தம்) என்னும் பொருள் இருக்கிறது. ÷"தமிழ்' என்னும் சொல்லிலும் "ழ'கரம் உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ்மொழி ஒன்றில்தான் "ழ'கரம் உள்ளது. "தமிழ்' என்னும் சொல்லில் இதன் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம். த - த் + அ. த் - தகராகாசம்; அ - இறைவன் (பரமான்மா). மி - மாயையொடு கூடிய உயிர் (ஜீவான்மா). ழ் - (இறைவனும் ஆன்மாவும் சேர்ந்தபோது உண்டாகின்ற) இன்பம். ÷ஆக

மறக்க முடியுமா....

÷ ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல; அவர் வாழ்ந்த காலத்தில் இந்த உலகுக்கு எதை விட்டுச்சென்றார் என்பதுதான் முக்கியம். ஆடு, மாடுகள் கூடத்தான் ஆண்டாண்டு காலங்கள் வாழ்கின்றன. ஆனால், மனிதனாகப் பிறந்தவன் இந்த பூமியில் தான் வந்ததற்கான அடையாளத்தை எந்த வகையிலாவதுப் பதிவுசெய்ய - விட்டுச்செல்ல வேண்டும். அந்த வகையில், மிகக் குறுகிய காலமே வாழ்ந்த திரையிசைக் கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காக விட்டுச்சென்ற தத்துவங்கள் ஏராளம்.. ஏராளம்.... ÷ 19 வயதிலேயே கவிபாடத் தொடங்கிய அந்தக் கானக்குயிலின் கருப்பொருள்கள், அரசியல், தத்துவம், பாட்டாளிகளின் குரல், இறைமை, நாடு, கதை, நகைச்சுவை, சமூகம், சோகம், இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, கோபம், பொது எனப் பரந்து விரிந்தது ஒலித்தது. ÷எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதில் விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும், திராவிட இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய இந்தப் பாட்டுக்குயில், விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளத் தொழில், நாடக நடிகர், பாடலாசிரியர் என 17 வகையானத் தொழில்களை 29 வயதுக்குள்ளாவே செய்