Posts

Showing posts from May 26, 2019

முதுமையிலும் இளமை! - மகளிர் மணி (தினமணி)

Image
தினமணி - மகளிர் மணி – 15.5.2019 முதுமையிலும் இளமை ! - இடைமருதூர்   கி . மஞ்சுளா                சமீபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் சிலர் " பணி ஓய்வு ' பெற்றதைக் கேள்விப்பட்டு ,   " இப்போது என்ன செய்கிறீர்கள் ?' என்று இதே கேள்வியைத் தனித்தனியாக அவர்களிடம் கேட்டபோது , " அதுதான் பணி ஓய்வு பெற்றாகிவிட்டதே ... வேறு என்ன வேலை இருக்கிறது ?   நேரத்திற்கு சாப்பிடுவது , தூங்குவது , டி . வி . பார்ப்பது ' என்பதுதான் அனைவரிடமிருந்தும் வந்த பதில் .                  அவர்கள் அனைவருமே " பணி ஓய்வு ' என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது . பணி ஓய்வு என்பது நாம் செய்துவந்த அலுவலகப் பணியிலிருந்துதானே தவிர , நம் உடலுக்கோ , மனதுக்கோ அல்ல . முதுமையில் பிறருக்குப் பாரமாக இருக்கக்கூடாது , உடலையும் , மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இவர்கள் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ளும்   தருணம் இது என்பதை அவ