Posts

Showing posts from January 15, 2017

ஏறு தழுவுதல் - நம் பண்பாட்டின் உச்சம்!

Image
ஏறு தழுவுதல்  நம் பண்பாட்டின் உச்சம்! -இடைமருதூர் கி.மஞ்சுளா   தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாகக் காலங்காலமாகப் போற் றப்பட்டு, நடத்தப்பட்டு வந்ததுதான் இந்த ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு. இது குறித்த செய்திகள் நம் சங்கத் தமிழ் நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை, மலைபடுகடாம் முதலிய நூல்களிலும், சிற்றிலக்கியங்கள் சிலவற்றிலும் உள்ளன. இதனால் ஜல்லிக்கட்டு என்னும் ஏறுதழுவுதல் நம் பழந்தமிழரின் காதல், வீரம், பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றைப் பறைசாற்றும் ஒரு வீர விளையாட்டாகும். “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையிலும் புல்லாளே ஆயமகள்” என்பது கலித்தொகைப் பாடல். கொல்லேறைப் பிடிக்க அஞ்சுபவனை,   மறுபிறப்பிலும் கட்டித்தழுவ ஆசைப்பட மாட்டாள் ஆயமகள் என்பது இதன் பொருள். எந்த ஒரு பெண்ணும் வீரனையே விரும்புவாள். “மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம் முல்லையம் பூங்குழல் தான்” என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, ஓர் ஆயமகன், ஓர் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால், கொடிய போரேற்றைத் தழுவி வெற்றிபெறல் வேண்டும். இல்லையேல் அத்தலைவியின் அழகு மேனியைத் த