Posts

Showing posts from February 5, 2017

வள்ளலார் - பசிப்பிணி மருத்துவர்

Image
இன்று தைப்பூசம். வள்ளலார் பெருமான் சாலை (உடற்பசி), சங்கம்(அறிவுப்பசி) , சபை(வறியோர்க்கு, எளியோர்க்கு உதவுதல்) மூன்றையும் நிறுவி, மேற்கண்ட பசிகளைப் போக்கிய பசிப்பிணி மருத்துவராவார்.   அருட்பிரகாச வள்ளலாரின் கருத்துகள் சிலவற்றையாவது நாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிப்பது நல்லது. சென்ற ஆண்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள  - அவர் பலகாலம் வாழ்ந்த - முருகன் கண்ணாடியில் தரிசனம் தந்த அந்தச் சிறிய அறையில் அமரும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் இன்று இருந்த இடத்திலிருந்தே அவரை வணங்கி மகிழ்கிறேன்.  இன்று அலுவலகத்தில் இருவருக்கு மதிய உணவு வழங்க  எம்பெருமான் எனக்கு அருள் புரிந்துள்ளது நான் பெற்ற பெரும் பேறு. என்றாலும் அவருடைய அருள் வாக்குகள் சிலவற்றை கைக்கொள்வோம். 1. புலால் உண்பதைத் தவிர்ப்பேன். 2. மரம், செடி, கொடிகளையும் என் தோழன் போல பாவிப்பேன். 3. பசித்தோர்க்கு உணவளிப்பேன். 4. ஏழைகளுக்கு இரங்குவேன், உதவி செய்வேன். 5. கண்டு, கேட்டு, படித்த நல்ல செய்திகளைப் பலருக்கும் தெரிவிப்பேன். 6. பொய் பேசாதிருப்பேன். 7. உத்தமர்களின் உறவையே நாடுவேன் 8. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசமாட்

ஸ்ரீகாஞ்சி காமாட்சி - அறம் வளர்த்த நாயகி

Image
இன்று மூன்று சிறப்பு. ஒன்று தைப்பூசம். வடலூரிலும், இடைமருதூரிலும் தைப்பூசம் மிகவும் சிறப்பு. அடுத்து இன்று காஞ்சி காமாட்சி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா. இரண்டு நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் சென்றும் என் அன்னை காமாட்சியை தரிசிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் அவள், அவளைப் பற்றி என்னை 2010-இல் எழுதவைத்த “அறம் வளர்த்த நாயகி” நூலை எடுத்து மனம் மகிழப் பார்த்தேன். இந்த நூலின் சிறப்பு ஒரு புறம் இருக்க, இந்நூலை காஞ்சி ஸ்ரீகாமாட்சி பொ ற் பாதங்களில் வைப்பதற்கு முன்,   ஸ்ரீசங்கர மடத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொற்கரங்களில் தந்து வெளியிட்டு வாழ்த்தியது – அடியேன் மகிழ்ந்தது. இதெல்லாம் தெய்வ சங்கற்பம் அல்லாது வேறொன்றுமில்லை. இந்நூலின் மேலும் ஒரு சிறப்பு காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலிருந்து வந்திருந்த அருளுரை இடம்பெற்றிருப்பது. இன்னொரு சிறப்பு முன்பு தினமணி வெள்ளிமணி, தமிழன் எக்ஸ்பிரஸ், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராக (ஆசிரியராக) இருந்த பத்திரிகையாளர் சிவஞானச் செல்வர், ஆன்மிக சொற்பொழிவாளர் திரு ஆர்.சிவக்குமார் அவர்கள் கொடுத்திருந்த அணிந்துரை. அவரின் இழப்பு ஆன்மிக உலகிற்க

தில்லையில் ஒரு நாள்

Image
முனைவர் பட்ட ஆய்வை சமர்ப்பிக்கும் முன் தில்லைக்குச் சென்று அவரிடம் அனுமதியும் அருளாசியும் வாங்காமல் இருப்பது என் ஆய்வேட்டுக்குச் சிறப்பல்ல என்பதால், கடந்த மாதம் தில்லைத் திருக்கோயிலுக்கும் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கி இருந்த பர்ணசாலைக்கும், (அதாவது திருவாசகத்தை மணிவாசகர் சொல்லச் சொல்ல நடராசப் பெருமான் தம் கைப்பட உட்கார்ந்து எழுதிய - திருவாசகம் திருக்கோவையார் உருவான அந்த ஞான பர்ணசாலை), தில்லைக்காளி கோயிலுக்கும் சென்றிருந்த அனுபவம் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை... எல்லாம் எம்பெருமானின், அம்மையப்பரின் பெருங்கருணை என்றே கூறவேண்டும். அப்பெருங்கருணையே, அத் திருவருளே என்னை இப்பணியை செவ்வனே முடிக்கத் துணை நின்றுள்ளது என்பதையும் உணர்ந்துகொண்டேன்....  எல்லாம் அவன் செயல்.... எல்லாம் சிவன் செயல் - என்பதுதான் சைவ சித்தாந்தத்தின் தாரக மந்திரம். அதை உணர்ந்தவர்கள்.... அவன்(சிவன்) நடத்தும் விளையாட்டில் தங்களையும் சேர்த்துக்கொள்ளச் சொல்வார்கள்.....அடியேன் சைவ சித்தாந்தம் என்று பயின்றேனோ அன்றே நானும் இந்த விளையாட்டில் சேர்ந்துவிட்டேன்....நீங்களும் வாருங்கள்.....இந்த விளையாட்டில் பரிசாக முத்தி எனும் ஞா

பன்னாட்டுக் கருதரங்கம்

Image
7.2.2017   அன்று ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தினமணி நாளிதழ், அகில இந்திய வானொலி நிலையம், ஸ்ரீசங்கரா தொலைக்காட்சி ஆகியவை இணைந்து நடத்திய பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் இலக்கியங்களில் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள், சமூக மேம்பாட்டில் தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆகிய இரு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, நூலாகத் தொகுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக்கழக, தமிழ் மொழித்துறை பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் அவர்களுக்கு “யாப்பியல் வேந்தர்” என்ற விருது வழங்கப்பட்டது. அவரைக் கண்டு பேசி, அளவளாவும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடைய யாப்பியல் பணிக்கும் தமிழ்த் தொண்டுக்கும் நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.   மேலும், “சமூக மேம்பாட்டில் தகவல் தொடர்பு ஊடகங்கள்” என்ற பொருண்மையில் அமைந்த அமர்வில் அரும்பாக்கம் வைஷ்ணவ கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் திரு ப.முருகன் அவர்களும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையைச் சார்ந்த முனைவர் இரா. ஜெகதீசன் அவர்களும் இருந்தார்கள