Posts

Showing posts from July 13, 2014

எது உழவாரப் பணி?

Image
சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர், "தாண்டக வேந்தர்' என்று போற்றப்படுபவர். மருணீக்கியராக இருந்த இவருக்கு சிவபெருமான் சூட்டிய பெயர் நாவுக்கரசர். "வாகீசர்' என்ற பெயரும் உண்டு. "அப்பர்' என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் ஐந்தெழுத்து ("ஓம் நமசிவாய - மந்திரத்தை) படைக்கலத்தை நாவிலும், "உழவாரம்' என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர். அவர் செய்த உழவாரப்பணி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதைக் காண்போம். திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் இருக்கும். இப்படி சிவபெருமான் நால்வருக்கும் ஓர் அடையாளத்தைத் தந்து, அந்த அடையாளத்தின் மூலம் அவர்கள் செய்த செற்கரிய செயல்களை உலகறியச் செய்துள்ளார். ÷சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் பெருமான், சகோதரி திலவதியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைத்து, மனம் நொந்து சில காலம் சமண சார்ந்து பல இன்னல்களுக்கு ஆளானார். சிவபக்தையான திகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் திருவருளால் அவர் மீண்டும

இடைமருதூர் கி.மஞ்சுளா பற்றி.....

Image
இடைமருதூர் கி.மஞ்சுளாவைப் பற்றிய சிறு குறிப்பு....... வேதாரண்யம் அருகில் உள்ள கரும்பம்பலம் என்ற சிற்றூரில் 1969-ஆம் ஆண்டு பிறந்தவர். தாய்-எஸ்.கல்யாணி (அரசுப் பள்ளி நூலகர், இந்தி பண்டிதர்-ஓய்வு), தந்தை-கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்).  ஆரம்பக் கல்வியை சுவாமிமலை மூலப்பள்ளி என்னும் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை (9,10-ஆம் வகுப்பு) சுவாமிமலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 11, மற்றும் 12-ஆம் வகுப்பை திருவிடைமருதூர் (இடைமருதூர்), திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் (தமிழ் இலக்கியம்), எம்.ஏ.,(தமிழ் இலக்கியம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பயின்றவர். இளம் முனைவர் (எம்ஃபில்)பட்டத்திற்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு திருவாசகத்தில் மகளிர் ஆடல். முதல் இடத்தில் தேர்வு பெற்ற இந்த ஆய்வேடு, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியோடு 2005-ஆம் ஆண்டு நூலாக வெளிவந்ததுள்ளது. தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட(திருவாசகம் தொடர்பாக)  ஆய்வு செய்து வருகிறார்.   தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிக