Posts

Showing posts from March 19, 2017

கழகம் - இனி வேண்டாம் -மறுபதிப்பு

Image
தினமணி - தமிழ்மணியில் வெளியான (12.3.2017) “கழகம் இனி வேண்டாம்” - இடைமருதூர் கி.மஞ்சுளா) கட்டுரையை வளசரவாக்கம் செய்தி மடல் பத்திரிகையில் மறுபதிப்பு செய்து, அக்கட்டுரையின் கீழ் சிறு குறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மடல் பதிப்பில் நிறைய பிழைகளுடன் (அந்தக் கட்டுரை) இருந்தது என்பது வேறு விஷயம். கண்ணில் பட்ட பிழைகளை மட்டும் வட்டமிட்டு வைத்துள்ளேன். சென்ற ஞாயிற்றுக்கிழமை ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த எங்கள் அலுவலக நண்பரும் பக்க வடிவமைப்பாளருமான திரு சூரியநாராயணன் அவர்கள் என்னிடம் ஞாயிறு அன்றே தொலைபேசியில் இதுகுறித்துத் தெரிவித்துவிட்டு ஒரு பிரதியையையும் கையோடு வாங்கிவந்து என்னிடம் தந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. தமிழ்மணியில் இந்தக் கட்டுரையைப் பக்க வடிவமைப்பு செய்ததும் இவர்தான்.   ஒரு கட்டுரை வேறு பத்திரிகையில் மறுபதிப்பு ஆகிறது என்பதுதான் அந்தக் கட்டுரையின் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல். இதுபோல் தமிழ்மணியில் வந்த (என்னுடைய) பல கட்டுரைகள் (கலைமகள், மெய்கண்டார், சிவனருள், திருக்குறள் கருத்துரை இலவச வெளியீடு, திலகவதியார் ஆதீன

கண்ணம்மா... கண்ணம்மாவில் ஜொலிக்கும் ஜோதி

Image
இன்று தினமணி - மகளிர் மணியில் வெளியான சிறு தகவல் இது. அவசியம் இந்தச் சிறுமி பாடிய அப்பாடலை ஒருமுறையாவது கேளுங்கள். மகளிர் மணி ....22.3.2017 ஜொலிக்கும் ஜோதி ! ÷ ஒரு திரைப்படப் பாடல் பிரபலமடைய வேண்டும் என்றால் , அப்பாடலுக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் . ஒன்று அப்பாடலை இயற்றிய பாடலாசிரியரின் மொழி நடை , அடுத்து அப்பாடலுக்கு இசையமைத்த இசையப்பாளரின் கைவரிசை , இதற்கெல்லாம் மேலாக அப்பாடலைப் பாடியவரின் குரல் . ஆனால் , திரைப்படத்தில் அப்பாடலை அதிகம் கவனிக்காதவர்கள் கூட தற்போது பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான ஜோதி என்ற பெண் அதே பாடலைப் பாடி பலரையும் கவனிக்க வைத்துவிட்டார் . அவர் பாடிய அப்பாடல் வலைதளங்கள் பலவற்றிலும் வைரலாகப் பரவி வருகிறது . " றெக்க ' திரைப்படத்தில் வரும் "" கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை '' என்ற பாடல்தான் அது . ÷ இவர் ஒருநாள் சர்ச்சில் பாடியபோது , அதை அனைவரும் பாராட்டியதோடு , அப்பாடலை வீடியோ எடுத்து   இணையதளத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறார்கள் .÷ ÷ யுகபாரதி எழுத

தமிழ் இலக்கியத் தொடரடைவுகள்!

Image
தமிழ் இலக்கியத் தொடரடைவுகள்! (தினமணி - தமிழ்மணி - 19.3.2017 -By  வாசி  (இடைமருதூர் கி.மஞ்சுளா) ÷ இன்றைக்கு இணைய தளத்தைப் பயன்படுத்தாதவர்கள் மிகமிகக் குறைவு. குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், நூலகம் செல்ல முடியாதவர் போன்றோர் தங்கள் கல்வி தொடர்பானவற்றை இணையதளங்களைப் பயன்படுத்தி உடனுக்குடன் பயன்பெறுகின்றனர். ÷தமிழ் இலக்கியம், இலக்கணம், செய்யுள்கள், கட்டுரைகள், கலைக்களஞ்சியங்கள், சொல்லடைவுகள், அகராதிகள், நிகண்டுகள் முதலியவை தொடர்பாகத் தேடுவதற்குத் தனிப்பட்ட பல தமிழ் இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ள. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று tamilconcordance.in  என்கிற இணையதளம். "தமிழ் இலக்கியத் தொடரடைவு' ((Concordance for Tamil Literature)  )  என்கிற பெயரில் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள், தகவல்கள் அனைத்தும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ÷இந்த இணைய தளத்தை உருவாக்கியவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 37 ஆண்டுகள் முதல்வர், துணை முதல்வர், இயக்குநர், கணிதத்துறை முன்னாள் தலைவர் என பல பதவிகள் வகித்த முனைவர் ப. பாண்டியராஜா. பல்கலைக்கழகங்கள் பல நடத்திய ஆய்வரங்குகளில் தமிழ் இலக்கியம் -