Posts

Showing posts from February 26, 2017

பிரபலங்களோடு சில நினைவுகள்-5

Image
1.  மாணிக்கவாசகர் குருபூஜை நாளன்று, காவிரிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது,  திருவாசகம் திருப்பாண்டிப்பதிகம் நூலை வெளியிட்டு சிறப்பு செய்த  (காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த தம்பிரான் சுவாமிகள். 2.  சின்ன காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற திருமுறை  நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது  தம்பிரான் சுவாமிகளிடம் திருநீறு பெறுதல். 3. சென்னை, குமரன் குன்றம் திருக்கோயிலில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நூல் வெளியிட்டு சிறப்பித்தது. 4. தமிழறிஞர் தமிழ்ப் பெரியசாமி எங்கள் அலுவலகம் வந்திருந்தபோது (2009) அவருடன் எடுத்துக்கொண்ட நிழற்படம்.

திருவாசகத்தில்...

Image
இது என் இளம் முனைவர் பட்ட ஆய்வேடு (நூல்). இந்நூலுக்கு என் இளைய சகோதரி கி.உமா வரைந்த (மணிவாசகர் குறிப்பிடும் மகளிர் ஆடும் விளையாட்டுகள் குறித்த ஓவியங்கள்) அழகுக்கு அழகு சேர்த்தன. அவருக்கு என் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

நாடோடிக் கதைகள்

Image
  ஆன்மிகத் தலைப்பாக இருந்ததாலோ என்னவோ (ஞானத்தின் வாயில்- யாருக்கும் பிடிக்கவில்லை போலும்) வடமொழி (தமிழில் நான் மொழிபெயர்த்த) நாடோடிக் கதைகள் அடங்கிய இந்நூலுக்கு நூலக ஆணை (கிடைக்க வைப்பது குதிரைக் கொம்பாயிற்றே….) கிடைக்கவில்லை.  அதுமட்டுமல்ல இதை நானே பதிப்பித்து கையைச் சுட்டுக்கொண்டேன்.   இந்நூல் தினமணியில் புத்தக விமர்சனப் பகுதியில் இடம்பெற்று அதைப் பலரும் கேட்டும் கொடுக்க முடியவில்லை…..சில பிரதிகளே அச்சிடப்பட்டன. அவற்றுள் தற்போது ஓரிரு பிரதிகளே மிச்சம். இந்நூலின் சிறப்பு, என் தாய் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது, அடியேன் தாய்க்கு ஒரு கவிதை எழுதியது....

சிறுவர் சிறுகதை - தினமணி சிறுவர்மணி

Image
சில மாதங்களாக செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அனைவரும் எப்படி அவதிப்பட்டோம். அதை மறக்க முடியுமா? ஆனால், செல்லாத காசை (தாய்-தந்தை தந்தது) சேர்த்து வைத்திருந்த நான், அதைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு செல்லும் காசாக மாற்றிய அற்புதம் தினமணி-சிறுவர்மணியில் எழுதிய “செல்லாக்காசு” எனும் சிறுவர் சிறுகதையால் நிகழ்ந்தது. ஆம்… அந்தச் செல்லாக்காசு சிறுகதை சாகித்ய அகாதெமியினரால் தேர்வு செய்யப்பட்டு,   செல்லும் காசாகி, இன்று எனக்கு அக்கதைக்கான தொகை காசோலையாக வந்துள்ளதை நினைத்து, சிறுவர் இலக்கியத்திற்காக நான் வாங்கிய சாகித்ய அகாதெமி விருது என்றே அகமகிழ்கிறேன். சாகித்ய அகாதெமிக்கு என் மனமார்ந்த நன்றி…நன்றி…நன்றி… கூடவே முனைவர் சொ. சேதுபதி அவர்களுக்கு, முனைவர் இரா.காமராசு அவர்களுக்கும்…