Posts

Showing posts from January 8, 2023

அப்பாக்கள் பலவிதம் சிறுகதைத் தொகுப்பு நூல் - இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளாவின் "அப்பாக்கள் பலவிதம்" சிறுகதைத் தொகுப்பு நூல் மற்றும் திருமூலரும் வாலாம்பிகையும், ஜம்புவும் ஜிங்லியும் (சிறார் நாவல்), தாத்தா சொன்ன கதைகள் (சிறார் சிறுகதைகள் ஆங்கிலத்தில்) மேலும் இவருடைய மகள் ஸ்ரீவித்யா சந்திரமௌலி (எம்.டெக்-நேனோ டெக்) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கன்னிக்கோவில் இராஜாவின் அணில்களின் ஓட்டப் பந்தயம் (சிறார் சிறுகதை) ஆகிய நூல்கள் வெளியீ்ட்டு விழா. 08.1.2023 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்... அது மட்டுமன்று பிறரும் மறக்கக்கூடாத நாள்... "அப்பாக்கள் பலவிதம்" தொகுப்பு நூல் பலவிதமான தடைகளையும் தாண்டி வெற்றி விழா கண்டு வெளியாகி... என் சமகாலத்து எழுத்தாளர் பலருடைய எழுத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நன்னாள். பலவிதமான அப்பாக்களின் நல்ல பக்கங்களையும் கெட்ட பக்கங்களையும் எடுத்துரைத்த மகத்தான நாள். அப்பாவுக்கான இலக்கணம் கூறும் முதல் தொகுப்பு நூல் வெளியான நாள்.. அப்பாவை நேசிப்பவர்கள் மறக்கவே கூடாது பொன்நாள்.. தமிழவேள் சிவாலயம் ஜெ. மோகன் அவர்கள் தலைமையில் நடந்த அப்பாக்கள் பலவிதம் உள்ளிட்ட ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பா

எழுத்தாளர்: #முனைவர்_இடைமருதூர்_கி_மஞ்சுளாதலைப்பு: #ஜம்புவும்_ஜிங்கிலியும்

Image
Anbudan AnanthiLollipop Children's World · நூல் அறிமுகம் #5 தலைப்பு: #ஜம்புவும்_ஜிங்கிலியும் எழுத்தாளர்: #முனைவர்_இடைமருதூர்_கி_மஞ்சுளா பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை (9841236965) நூலின் விலை: ₹130 ஆன்மீகம் மற்றும் பிற இலக்கியங்களில் கவனம் செலுத்தி வரும் எழுத்தாளர் முனைவர் #கி_இடைமருதூர்_மஞ்சுளா அவர்களின் சமீபத்திய வரவு இது. தினமணி-சிறுவர் மணி இதழில் பணிபுரிந்த அனுபவத்தின் நீட்சியாக அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்து வருவதை தடுக்கும் பல உத்திகளோடு இந்த நாவல் #லாலிபாப்_சிறுவர்_உலகம் பதிப்பகத்தின் வாயிலாக வெளி வந்திருப்பது சிறப்பு. இந்த நூலின் அட்டைப் படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இது போன்ற சிறந்த படைப்புகள் மென்மேலும் வெளிவர நூலின் ஆசிரியருக்கு அனைவர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். #நெல்லை_அன்புடன்_ஆனந்தி