Posts

Showing posts from September 15, 2013
Image
சிவாய நம திருச்சிற்றம்பலம்    கட்டுரையாளர் இடைமருதூர் கி.மஞ்சுளா ( காவேரிப்பாக்கம், அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம்  மணிவாசகர் குருபூஜை (2013) நாள் மலரில் இடம்பெற்ற கட்டுரை) யானாகி நின்றான் எச்சம்மறி வேன்நான் எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோ வெங்கள் அரனே! அருமருந்தே! எனதமுதே! செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம் என நெஞ்சின்மன்னி யானாகி நின்றானே!                                                                              (திருவாசகம்., உயிருண்ணிப் பத்து, பா.10)  மணிவாசகப் பெருந்தகை, உயிருண்ணிப் பத்து பதிகத்தை சிவானந்த மேலீட்டால் பாடியுள்ளார். மணிவாசகர் திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கின்ற காலத்தில் இறைவன் ஊனார் உயிர் கலந்து உள்ளத்தை விட்டுப் பிரியாது பேரின்பத்திருத்திய பெற்றியால் திளைத்து, அவ்வனுபவ அதிசயங்களை இப்பத்துப் பாடல்களாலும் அருளிச் செய்துள்ளார்கள் என்பது தண்டபாணி தேசிகர் உரை விளக்கம். உயிருண்ணிப் பத்து 9-ஆவது பாடலின் மூலம், சிவபரம்பொருள் மாணிக்கவாசகராவே (யானாகி) ஆகிநின்ற தன்மையை விளக்கியுள்ளார். இப்பாடலின் மூலம் சைவ சித்தாந்தப் பேருண