Posts

Showing posts from December 6, 2015

விக்கிரம வீறு விளங்குகவே....

Image
இவர்  - என் தாய் எஸ்.கல்யாணி (அரசுப் பள்ளி நூலகர், இந்திப் பண்டிட்) - என் எழுத்துக்களை முதலில் வாசித்து ரசிக்கும் என் முதல்  வாசகி. ஆனால் இந்தப் பதிவை வாசிக்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டம். ------------------------ இப்போது கலைமாமணி விக்கிரமன் அவர்களைப் பற்றி பதிவு செய்தே ஆகவேண்டிய தருணம் . என் தாய் ( நவம்பர் 8, -2015 ) காலமான பின்பு இனி எழுதவே கூடாது என்று இருந்தேன் . ஆனால் அந்த வைராக்கியத்தை விக்கிரமன் அவர்கள் தகர்த்துவிட்டார் . விக்கிரமனுடனான என் உறவும் தொடர்பும் தமிழன்னை எனக்குத் தந்தது என்றே கருதுகிறேன் . எழுத்திலேயே பார்த்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதருடன் நெருங்கிப் பழங்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பது அரிது . இது பூர்வஜென்ம புண்ணியம்தான் கடந்த நவம்பர் மாதத்தை என் வாழ்நாளில் மட்டுமல்ல எத்தனை ஜென்பமங்கள் எடுத்தாலும் மறக்கமுடியாது . காரணம் , என் தாயின் மரணம் ஈடுசெய்ய முடியாத முதல் இழப்பு . அடுத்து என் மதிப்பிற்குரிய பெரியவர் கலைமாமணி விக்கிரமனின் மறைவு . நாளை நாளை என்று ஒத்திவைக்கும் வேலைகள் நம்