Posts

Showing posts from March 4, 2018

மகளிர் தினம் - வெறும் பேச்சோடுதானா...?

Image
வெறும் பேச்சோடுதானா ...? First publish Dinamani –march-8, 2018, By -   இடைமருதூர் கி . மஞ்சுளா                 மார்ச் 8- ஆம் தேதி , இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைப் பெருமைப்படுத்தும்படியான பல நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன . அன்றிரவோடு அன்றைய " மகளிர் தின ' க் கொண்டாட்டமும் முடிவுக்கு வந்துவிடும் .                   " பெண்ணின் ' பெருமைகளையும் , உரிமைகளையும் , பாதுகாப்புகளையும் பற்றிப் பலகாலம் பேசிப் பேசி அவற்றை ஏடுகளில் பதிவு செய்த நல்லறிஞர்களின் நன்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுவடிகளிலும் , புத்தக அலமாரிகளிலும்   பாதுகாக்கப்பட்டு ,   நிம்மதியாக இருக்கின்றன . ஆனால் ,   மகளிருக்குத்தான் சங்க காலம் தொடங்கி , சமகாலம் வரை எந்தவிதப் பாதுகாப்புமில்லை ; சுதந்திரமுமில்லை ;   நிம்மதியுமில்லை .                 பாரத தேசம் , நதி , ஆறு ,   மொழி , கல்வி , செல்வம் , வீரம் எனப் பலவற்றையும் பெண்ணாகவும் பெண் தெய்வங்களாகவும் பாவித்துப் போற்றுவது தமிழர் மரபு . ஆனால் , அம்மரபில் வந்துதித்த மகளிர்க்குப்