Posts

Showing posts from May 15, 2016

யாருக்கு வாக்கு?

யாருக்கு வாக்கு? by - இடைமருதூர் கி.மஞ்சுளா ÷கடந்த இரண்டு மாத காலமாகத் தமிழ்நாட்டைச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்கு வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. இன்று தேர்தல். ÷இன்று எங்கும், எதிலும் சுயநலமே தலைதூக்கி நிற்கிறது. அதுவே வெற்றியும் பெறுகிறது! ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டால் தான், தன் குடும்பம், தன் தலைமுறைகள் மட்டும் வாழ்ந்தால் போதும், மக்கள் எப்படிப்போனால் என்ன? என்ற எண்ணமே விஞ்சி நிற்கிறது. என்னதான் ஆளுங்கட்சியைப் பற்றி எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியைப் பற்றி ஆளுங்கட்சியும் குற்றப்பத்திரிகையை நாள்தோறும் வாசித்துக்கொண்டே இருந்தாலும், தங்கள் வாக்குறுதிகளை வாரி வழங்குவதில் மட்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்! வாரி வழங்கும் வாக்குறுதிகள், மக்களின் நிரந்தரமானப் பிரச்னைக்குத் தீர்வாக இல்லை. எல்லாம் தற்காலிகமானவையே! ÷தமிழ் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய நிரந்தரமானப் பிரச்னைகளைப் பட்டியலிட்டால் அவை எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டில் "தமிழ்' ஆட்சி மொழியாக இல்லை; "தமிழ்'க் கல்வி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை உள்ளிட்ட விஷயங்களில் இருக்கட்டும். அன்றாட வாழ்க்கையில்

பாதி பாடலுக்குப் பரிசு!

Image
பாதி பாடலுக்குப் பரிசு! ÷திருப்புவனம் எனப்படும் திருப்பூவண நகரத்தில் பிறந்தவள் பொன்னணையாள். இவர் ஒரு தாசி. திருப்பூவணத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பூவணநாதர் மீது அளப்பரிய பக்தியும், அன்பும் கொண்டு அவரை வழிபட்டு வந்த சிறந்த சிவபக்தை இவள்! குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையைத் தந்தியினிடத்தில் எழச்செய்யும் யாழுக்கு இசையப் பாடும் திறம்படைத்தவள்; செந்தமிழ்ப் பாக்களை இயற்றுவதிலும் புலமை பெற்றவள். ஆடற்கலையிலும் தேர்ந்தவள். ÷கடவுளுக்கும், கடவுளது மெய்யடியார்களுக்கும் தொண்டு செய்வதிலும் சிறந்து விளங்கியவள். சிவனடியார்களைப் பற்பல மலர்களால் அருச்சித்து, அவர்களுக்குச் சுவையான அமுது செய்வித்து, எஞ்சியதை உண்பதையே  வழக்கமாக் கொண்டவள். இவள் இவ்வாறு சிறந்து விளங்கியதை, "ஆய மாதர்பேர் பொன்னணை யாளென்ப வவள்தன் நேய வாயமோ டிரவிருள் நீங்குமு னெழுந்து தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி நாய னாடி யருச்சினை நியமமு நடத்தி திருத்த பூவண வாணரைச் சேவித்துச் சுத்த நிருத்த மாடிவந் தடியாரைப் பொருளென நினையுங் கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண் அருந்தி யெஞ்சி