Posts

Showing posts from 2022

வட சென்னை தமிழ் இளைஞர் கழகம்- இளம் சாதனையாளர் விருது

Image
கடந்த சனிக்கிழமை 26.11.2022 அன்று வட சென்னை தமிழ் இளைஞர் கழகம் வழங்கிய "இளம் சாதனையாளர்" விருது

இடைமருதூர் கி.மஞ்சுளாவின் நூல்களை இனி இணையத்தில் மின்னூலாகப் படிக்கலாம்..

Image
https://www.pustaka.co.in/

சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறை நிகழ்ச்சி

Image
செப்டம்பர்-13 சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் நடந்த "இலக்கிய இன்பம்" மற்றும் "ஆசிரியர்" கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். (13.9.2022) மாணவ- மாணவியர் சிலப்பதிகாரத்தில் பெண், பாரதியார் காட்டும் பெண்கள், டாக்டர் அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள், கவிஞர் வாலியின் கவித்திறன், கங்கை மைந்தன் குகன், சிக்கனமும் சேமிப்பும், விளை நிலங்கள் விலை நிலங்கள் ஆவது ஏன் முதலிய சிறந்த தலைப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களே மிக அசத்தலாகப் பேசி அசத்தினார்கள்👍 உண்மையாகவே இலக்கிய இன்பத்தை நல்கியது இன்றைய நிகழ்ச்சி. இப்படி ஓர் அருமையான வாய்ப்பை எனக்கு வழங்கிய கல்லூரி முதல்வருக்கும், தமிழ்த்துறை தலைவர் ப. முருகன் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான அனைத்து பேராசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி🙏 ஒரு தாழ்மையான விண்ணப்பமும் வேண்டுகோளும் உண்டு.... இன்று தமிழ்ப் படிப்பவர்களே அதிலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களே அருகி வரும் நேரத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் ஆர்வ

சிறுவர் இலக்கியத்துக்கு முதன்முறையாக எழுதிய சிறார் நாவல் (சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தது)

Image
குழந்தைகளுக்காக பெண் படைப்பாளர்கள் எழுதுவதை சிறுவர் இலக்கியம் பெரிதும் வரவேற்கிறது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிறைய எழுதும்போது குழந்தைகளின் உளவியல் சார்ந்த கதைகள் வெளிப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது இதோ அமேசான் காடுகளில் உயிரினங்கள் குறித்த குறுநாவலை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள். அவருக்கு லாலிபாப் சிறுவர் உலகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. Book type: children's Novel Author :இடைமருதூர் கி.மஞ்சுளா Publisher: Lollipop Children's World Wrapper illustration: T.N.Rajan

கோயில் காட்டிப் பட்டி- திருக்கோயில் திருப்பணி

Image
நவம்பர், 7, 2022 வணக்கம்🙏 இரண்டு நாள்களுக்கு முன்பு செய்த பதிவில் (விராலிமலை,கொடும்பாளூர் அருகில்) "கோயில் காட்டிப் பட்டி". அதாவது முருகப்பெருமான்,விராலிமலை கோயில் எங்கே இருக்கிறது என்று திசை தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு வேடனாக வந்து, தான் வீற்றிருக்கும் விராலிமலை கோயிலைக் கை நீட்டிக் காட்டிய இடம் இந்த கோயில் காட்டி(டு)ப்பட்டி. அந்த இடத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தியையும் முருகப்பெருமான் வழங்கினார். ஆனால் அந்த இடம் இன்று சிதலமடைந்து கிடக்கிறது 😭 இந்த அற்புதத் தகவல் இன்று பலருக்கும் தெரியாது). 63 நாயன்மார்களில் அவரவர் பிறந்த ஊரில் கோயில் இல்லாத 30 பேருக்கு கோயில் எழுப்பி இருக்கிறார் சிவத்திரு ஐயா அ. சங்கர் அவர்கள் 🙏 அவர் இந்தக் கோயில் காட்டுப்பட்டி ஊரின் மகிமையை அறிந்து, கண்டுபிடித்து அந்தக் கோயிலை மீண்டும் புதுப்பிக்கும் பெரும் திருப்பணியில் இறங்கி இருக்கிறார். அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை மற்றும் (விருத்தாசலம்- திருமுதுகுன்றம்), காப்பர் டெம்பிள்- திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில் (தாமிர சபை) நிறுவனர் சிவத்திரு. அ.சங்கர் ஐயா அவர்களுடன் இணைந

ஆகஸ்ட் மாத (2022) முகத்தில் முகம்

Image

பிரம்மாண்டமான தாமிர சபை...

Image
விராலிமலை அருகில் உள்ள கொடும்பாலூரில் உருவாகி வரும் பிரம்மாண்டமான தாமிர சபை... காப்பர் டெம்பிள்... திருமுறை செப்பேடுத் திருக்கோயில். மேலும் அருணகிரிநாதருக்கு முருகன் விராலிமலை இருக்கும் இடத்துக்கு வழிகாட்டியதுடன், அவராகவே வலிய சென்று அருணகிரிநாதருக்கு அட்டமா சித்தி அருளிய இடம். அங்கே சிதலமடைந்து கிடக்கும் இடத்தில் சிவத்திரு. சங்கரன் ஐயாவின் கோயில் திருப்பணி தொடர்கிறது👍 63 நாயன்மார்கள் திருப்பணி அறக்கட்டளை (விருத்தாசலம்) மற்றும் காப்பர் டெம்பிள் நிறுவனர் சிவத்திரு. சங்கரன் ஐயா மற்றும் திருவாசகம் சிவபுராணம் சொல்லும் அன்புக் குழந்தைகளுடன்.... பல்வேறு அரிய கல்வெட்டு வரலாற்றுச் செய்திகளை புதைத்து வைத்திருக்கும்.. முசுகுந்த சுவாமி திருக் கோயில்... (கேட்பாரற்றுக் கிடக்கும்) உலா இன்று. தமிழர்களின் பண்பாடும் கலாசாரமும்... கோயில் கலைகளும் அழிந்து வருவதற்கு... இந்த ஒரு கோயிலும் ஓர் எடுத்துக்காட்டு 😭...நம் வரலாற்று, கலைச் செல்வங்களைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது... அதை நாங்கள் மீட்டெடுக்கப் புறப்பட்டு இருக்கிறோம் 🙏 திருவருள் துணை நிற்கட்டும் 👍

லேடீஸ் ஸ்பெஷல்- தீபாவளி மலரில் (2022) - காடுகள் வேண்டும்

Image
"திருமூலரும் வாலாம்பிகையும்" என்ற தலைப்பில் ... நூல் வெளிவர இருக்கும் இந்த நேரத்தில்... வாலாம்பிகை அட்டைப் படத்தோடு வெளிவந்திருக்கும் 2022 லேடிஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில்.... மேலும், சுற்றுச்சூழல் குறித்து "ஜம்புவும் ஜிங்லியும்" என்ற நாவலும் வெளியாக இருக்கும் இந்தத் தருணத்தில் "காடுகள் வேண்டும்" என்கிற தலைப்பில் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியான எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரை👍 ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக... அமைந்தது சிறப்பிலும் சிறப்பு 👍

நண்பர் செங்கோட்டை ஸ்ரீீராமின் பதிவு பழையது.. ஆனால் என்றும் புதியது

january 11, 2015 (senkottai sriram facebook) தினமணி/எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் என்னுடன் பணியில் இருந்த பெண்கள் பலரும் என்னுடன் சகோதர பாசத்துடனேயே பழகினார்கள். எனக்கு ரத்த சம்பந்தமுள்ள இளைய சகோதரிகள் இருவர் என்றாலும், உடன்பிறவா சகோதரிகள் பலர். குறிப்பாக வயதில் மூத்த பெண்கள், உடன்பிறப்பைப் போலவே பாசம் காட்டினார்கள். அவர்களில் தமிழ்மணியைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இடைமருதூர் மஞ்சுளாவும் ஒருவர். எனக்கான பெண் தேடும் படலத்தில் அவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புத்தகங்கள் சில எழுதியிருக்கிறார்... இன்று அவர் குறித்து தினமணி ஆசிரியர் - தமிழ்மணியில் எழுதியுள்ள பாராட்டுச் சான்றிதழ் இது! வாழ்க! வளர்க!! அவரது பணியும் தொண்டும்! *** //"தினமணி' முதுநிலை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய "ஆத்மதாகம்' என்கிற குறுநாவலுக்கு திருப்பூர் அரிமா சங்கம் 2014க்கான "சக்தி' விருது வழங்கியிருக்கிறது. விருது கிடைத்ததையாவது பதிவு செய்யாமல் இருந்தால் எப்படி? "தமிழ்மணி' பகுதியின் தயாரிப்பில் முதுநிலை உதவி ஆசியராகப் பணியாற்றும் அவருக்கு நீண்ட நாள்களாகவே த

சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடல்

Image
சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடல் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு அந்த வகையில் ஆகஸ்ட் சுசு ஆம் நாள் சென்னப்பட்டணம் என்று அழைக்கப்பட்ட மெட்ராஸ் தற்போது சென்னை என்று அழைக்கப்படும் சென்னை மாகாணத்திற்கு இன்று வயது 383. இந்த நாளில் முனைவர் இடைமருதூர் கி மஞ்சுளா அவர்களின் நட்பு அழைப்பின் பேரில் வ.தேனாம்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ந்தது. ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி நிறுவனத்தின் செயலர் எழுத்தாளர் சூ.குழந்தைசாமி அவர்கள் எழுதிய குழந்தைகளுக்கு காந்தி நூல் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் இடைமருதூர் கி மஞ்சுளா அவர்கள் தற்கால சிறார் வாழ்வியலை தன் உரையில் பசுமரத்தானியாய் பதிய விட்டார் எனக்கு கிடைத்த சில நிமிடங்களில் குழந்தைகளோடு குறில் நெடில் விளையாட்டு, நன்றி கதை சொல்ல இயன்றது. சிறப்பு விருந்தினராக வந்து நூலேணி நூல்கொடை திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு நூல் கொடை அளித்தார். புகைப்படங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சியை சிறப்பாய் ஒருங்கிணைத்தார் ஆசிரியை தா

"உலகெலாம்" - திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில்

Image
அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை, விருத்தாசலம். நிறுவனர் சிவத்திரு அ.சங்கர் ஐயா அவர்கள் மிகப்பெரிய திருக்கோயில் பணியைத் தொடங்கியிருக்கிறார். இதுவரை, (தான் பிறந்த ஊரில்) கோயில் இல்லாத நாயன்மார்கள் 30 பேருக்கும் மேல் அவரவர் பிறந்த ஊரில் கோயில் கட்டி, வழிபாடு நடத்தி வருகிறார். இதுமட்டுமல்ல... இன்னும் பல இருக்கிறது ஐயாவின் திருப்பணி பற்றி சொல்ல... இது குறித்த விவரங்களை கீழ்க்காணும் இணையதளங்களில் காணலாம். "உலகெலாம்" என்ற பெயர்கொண்டு திருமுறை தாமிர சபை (பன்னிரு திருமுறைகளையும் செப்பேடுகளில் பதித்துப் புத்தகமாக்கி அவற்றைக் கொண்டே கோயில் எழுப்பும் திருப்பணி) உருவாகி வருகிறது... இத்திருப்பணியில் அடியேனையும் இணை்த்துக் கொள்ள இறைவன் திருவுள்ளம் கொண்டிருக்கிறார். இது நான் பெற்ற பெரும் பேறு.... ஒருமுறை திருமுறை பாடினால்போதும் மறுமுறை கருவறை புகும் நிலை மாறும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது... திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் உலகமே திரும்பிப் பார்க்கப் போகும் இத்திருப்பணிக்கு, தங்களால் முடித்த பங்களிப்பை வழங்கி நடராசப் பெருமான

யானைக்கு உதவிய எறும்புகள் சிறுவர் சிறுகதைகள்

இன்றைய கதைவண்டி யானைக்கு உதவிய எறும்புகள் சிறுவர் சிறுகதைகள் புத்தகத்தம் வாசிக்க போறோம். ஆசிரியர்:முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள். Lollipop Children's World லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு மேலும் சில விபரங்கள் வீடியோவில் தெரிந்து கொள்ளலாம். புத்தகம் பெற லாலிபாப் சிறுவர் உலகம் 9841236965

எனது சிறுவர் இலக்கியப் பங்களிப்பு

Image
குழந்தை இலக்கியச் செல்வர் பி. வெங்கட்ராமன் ஐயா அவர்கள் அடிக்கடி என்னிடம் இது போல் ஒன்றை தயார் செய்து தனக்கு அனுப்புமாறு சொல்வார். இன்றும் அவரது அன்புத் தொல்லை நாலைந்து முறை...ஃபோன் கால்கள் மூலம்.... அதுதான் ஒரே மூச்சாக உட்கார்ந்து எனது 25 ஆண்டு கால பத்திரிகை, இலக்கியப் பங்களிப்பை, பயணத்தை) பதிவு செய்தேன்... அதில் ஒரு பகுதிதான் எனது சிறுவர் இலக்கியப் பங்களிப்பு👍

சேக்கிழார் ஆராய்ச்சி மையம் 30ஆம் ஆண்டு விழா

Image
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 30ஆம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழாவில் சிறந்த நூலாக இடைமருதூர் கி.மஞ்சுளாவின் "மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்" (டாக்டர் பட்டம்) நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொற்கிழி ரூ.25,000-மும், சேக்கிழார் விருதும் வழங்கப்பட்டது.