Posts

Showing posts from February 4, 2018

வள்ளலாரின் ஏக்கம்!

Image
அருட்பிரகாச வள்ளலாரின் ஏக்கம் ! - இடைமருதூர் கி . மஞ்சுளா தினமணி –தமிழ்மணி 28.1.2018                 " அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் " திருஅருட்பா ' ஆனதால் , அதில் திருவும் இருக்கிறது ; அருளும் இருக்கிறது . இரண்டும் இணைந்து திருவருள் ( அம்மை - அப்பர் )   ஆனது . அவற்றைப் படிப்போர்க்கு அவ்விரண்டும் திருவாகிய இறைவனும் , அருளாகிய இறைவியுமாகத் திருவருள் புரிகிறது ' என்பர் சான்றோர் .                 " அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை ' யான சிவபரம்பொருளை தம் அன்பால் அரவணைத்து அவரோடு ஜோதியில் இரண்டறக் கலந்து ,   மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார் .   உயிரின் ( ஆன்மா ) இயல்பு அன்பு ; இறைவனின் இயல்பு அருள் . இறைவனின் அருளே சக்தியாகத் ( அம்மை } கருணை ) திகழ்கிறது .                 " திருஞான சம்பந்தரும் வள்ளலாரும் ஓதாது உணர்ந்தவர்கள் ; இருவருமே பிள்ளைப் பருவத்தில் ஆட்கொள்ளப் பெற்றவர்கள் ; இருவருமே இறைவியால் அமுதூட்டப் பெற்றவர்கள் ; இருவருமே தங்கள் வாக்குகளை ஆணையிட்டு

கண்ணன், கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்தது நியாயமா?

Image
கண்ணன் , கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்தது நியாயமா ? ( தத்துவ விளக்கம்) ஸ்ரீகிருஷ்ணன் செய்த லீலைகள் குறித்து பாகவதம் விரித்துரைக்கிறது . அவன் லீலைகள் ஒவ்வொன்றிலுமே ஒரு தத்துவம் உள்ளுறையாக மறைந்திருக்கிறது . இதை உணராத சிலர் , பாலகோபாலனாக இருந்தபோது கண்ணன் , கன்னிப் பெண்களான கோபிகைகளின்   உடைகளைக் கவர்ந்தது   ( திருடியது ) நியாயமா ? இது ஓர் அவதாரப் புருஷன் செய்யக்கூடிய செயலா ?    என்றெல்லாம் ( தத்துவப் பொருள் உணராமல் - வஸ்திராபரண லீலை ) கேட்கக்கூடும் . சிலர் கேட்கவும் செய்கின்றனர் . அந்தத் தத்துவம்தான் என்ன ? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஓர் அந்தர்யாமி . அவர் ஒரு யோகேஷ்வரர் . பக்தர்கள் உள்ளத்தில் இருப்பதை உள்ளவாரே உணரக்கூடியவர் . தன்னை நாடி ,   வேண்டியவர்களுக்கு வேண்டியவாறு வரமளிக்கும் வள்ளல் .   தன்னையே நெஞ்சத்தில் நிறைத்து வைத்திருக்கும் தீவிர பக்தைகளான கோபிகைகளின் வேண்டுதல்களையும் , விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலா இருந்திருப்பார் ? பக்தர்கள் தங்கள் மன விருப்பப்படி கடவுளை எஜமானனாகவோ , நண்பனாகவோ , பிள்ளையாகவோ