Posts

Showing posts from 2018

மார்கழி மகா உற்சவம்

Image
மார்கழி மகா உற்சவம்(2018) – நங்கநல்லூர் ரஞ்சனி சபாவில் திருவையாறு என்று கூறுவதற்குத் தகுந்தபடி 150 இளம் இசைக் கலைஞர்களின் இசைச் சங்கமம் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தது.  நங்கநல்லூரில் 2008 தொடங்கி, சாய் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற இசைப் பள்ளியை நடத்திவரும் நெல்லை மு.விநாயக மூர்த்தியின் சீடர்கள்தாம் இந்நிகழ்ச்சியை படைத்தளித்தனர். வீணை, சித்தார், கீபோர்டு, வயலின் முதலிய இசைக்கருவிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரு பாடலை இசைத்தது செவிக்கு விருந்தளித்தது. கண்ணுக்கும், கருத்துக்கும்தான். தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள், தயானந்த சரஸ்வதி அவர்களின் கீர்த்தனை, திருப்புகழ், விநாயகர் பாடல், கிருஷ்ணன் பாடல் என்று செவியில் தேன் வந்து பாய்ந்தது.  இசைக் குடும்பத்தின் வழி வழியே வந்திருக்கும் திரு விநாயகமூர்த்தியின் தந்தை வி.முருகேசன் அவர்கள் ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல, நாடகக் கலைஞரும் கூட. தாய் வாய்ப்பாட்டு, வீணை இசைக் கலைஞர். நெல்லை விநாயகமூர்த்தி அவர்கள் சமீபத்தில் புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய “இசைக் கடல்” என்ற விருதை நானும் திருமதி வரலட்சுமி   (vocalist –all

சிறுவர் கதைகள் -உண்மை தந்த பரிசு

Image
புதுகைத் தென்றல் டிசம்பர் 2018-இல் வெளியான "உண்மை தந்த பரிசு"  நூல் விமர்சனப் பார்வை.....அருமை  

திருவாசகம் - காதல் செய்து உய்மின் தினமணி நூலரங்கம்

Image

குழந்தை இலக்கிய விழா!

Image
குழந்தை இலக்கிய விழா ! குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா பிறந்த நாளில் (07.11.2018) குழந்தை இலக்கிய விழா - ஒய் . எம் . சி . ஏ . பட்டிமன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் இடைமருதூர் கி . மஞ்சுளா எழுதிய ‘ உண்மை தந்த பரிசு ’ ( சிறுவர் கதைகள் ), எஸ் . ஆர் . ஜி . சுந்தரம் எழுதிய ‘ தாய் மண் உலா ’ ( சிறுவர் கதைகள் ), மகஸ்ரீ சீனிவாசன் எழுதிய ‘ குச்சிமிட்டாய் ’ ( சிறுவர் பாடல்கள் ), சொ . பத்மநாபன் எழுதிய ‘ அழகிய உலகம் ’ ( சிறுவர் பாடல்கள் ) ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட்டன . நான்கு நூல்களையும் கவிஞர் கா ர்முகிலோன் திறனாய்வு செய்தார் . குழந்தைக்கவிஞர் பேரவைத் தலைவர் திரு . பி . வெங்கட்ராமன் தலைமை வகித்தார் . ‘ ஞானாலயா ’ கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் முன்னதாக ஒய் . எம் . சி . ஏ கெ . பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்றினார் . அரங்கு நிறைந்து வழிய கோலாகலமாக விழா நடைபெற்றது . படத்தில் ( இ - மி ) ஒய் . எம் . சி . ஏ கெ . பக்தவத்சலம் , புதுகை தருமராசன் , ‘ ஞானாலயா ’ கிருஷ்ணமூர்த்தி , பி . வெங்கட்ராமன் , கார்ம

சாகித்ய அகாதெமி-பால சாஹிதி நிகழ்ச்சி 27-9-18

Image
சாகித்ய அகாதெமி நடத்திய பால சாஹிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர் இலக்கியம் குறைத்து உரையாற்றிய திரு. பாலதி பாலன்(தலைமை), யூமா வாசுகி, ஜி.ராஜாராம், இடைமருதூர் கி.மஞ்சுளா. உடன் கலந்துகொண்டு சிறப்பித்தோர் பேராசிரியர் இராம.குருநாதன், கன்னி்க்கோவில் ராஜா, சூளைமேடு அன்பரசன் மற்றும் பலர்.

சிவபுராணம் - நூல் வெளியீடு சிவநேயப் பேரவை

Image
நேற்று.. 16.9.18 ஞாயிறு... நடைபெற்ற நிகழ்ச்சி சிவ நேயப் பேரவையின் ஆறாம்  ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. ஈச நேசன் மகஸ்ரீயின் சிவபுராணம் உரை நூல் வெளியிடப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற 108 மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. இருபது அறிஞர்களுக்கு மாமணி விருது அளிக்கப்பட்டது.   அந்தச் செய்தி தினமலரின் இன்று (17.9.18) வெளியாகியுள்ளது.   

பாட்டி சொன்ன பாப்பா கதைகள் நூல் வெளியீடு

Image
திரு வசீகரன் அவர்கள் எழுதிய "பாட்டி சொன்ன பாப்பா கதைகள்" நூல் வெளியீடு குறித்த செய்திகள் மின்னல் தமிழ்ப்பணியில் வெளிவந்திருக்கிறது.  

திருவாசகம்- திருக்கோவையார் - கலாரசிகன் (இந்தவாரம்) பதிவு

Image
தினமணி - தமிழ்மணி  கலாரசிகன் பாராட்டு..... (17.6.2018) ஒரு மகிழ்ச்சியான செய்தி  "தமிழ்மணி' பகுதியை வெளிக்கொணர அதைத் தொடங்கியது முதல் கடந்த பத்தாண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் "தினமணி' நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.      தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், "மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் மரபுகள்' என்கிற தலைப்பில் திருவாசகம் -திருக்கோவையார் குறித்த அவரது ஆய்வுக்கு "முனைவர்' பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வுக்குப் பலரும் ஏதாவது சுமாரான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, தனக்குப் பிடித்தமான - தன் மானசீக குருநாதரான மாணிக்கவாசகரின் திருவாசகம் -  திருக்கோவையாரைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தவர் அவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அதற்காக இரவும் பகலும் பல தரவுகளையும் தேடிப் பிடித்து, திருவாசகம் -  திருக்கோவையாரில் மூழ்கித் திளைத்து அவர் மேற்கொண்ட சிரமங்கள் ஏராளம்.     சங்க இலக்கியம், சமய இலக்கியம்,  சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம்,

சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு

Image
27.5.2018 சென்னை இக்சா அரங்கத்தில் நடந்த சிறுவர் பாடல்கள், பாட்டி சொன்ன பாப்பா கதைகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி. சிறுவர் இலக்கியச் செம்மல் திரு. புதுகை பி.வெங்கட்ராமன், அமுதா பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், திரு.மறைமலை இலக்குவனார், திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீதர். திரு.வசீகரன் முதலியோர் பங்கேற்றனர். திரு. வசீகரன் அவர்கள் எழுதிய “பாட்டி சொன்ன பாப்பா கதைகள்” நூலை வெளியிட்டுப் பேசிய போது...