Posts

Showing posts from January 8, 2017

காலம் கருதி இருப்பர்...

Image
இதுதான் நம் சங்கத் தமிழரின் அடையாளம். சங்கத் தமிழரின் பாரம்பரியம் மிக்க இந்த வீர விளையாட்டான  ஏழுதழுவுதலை (மஞ்சுவிரட்டு - ஜல்லிக்கட்டு) போற்றுவோம். நம் தமிழர் பண்பாட்டை காலந்தோறும் பறைசாற்றுவோம். நம் பண்பாடு அழிந்து போகாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.  இன்று, கிட்டிப்புல், பல்லாங்குழி, தாயக்கட்டை முதலிய பல விளையாட்டுக்கள் அழிந்து போனதைப் போல இந்த ஏறுதழுவுதலும் அழிந்துவிடாமல் பாதுகாப்போம். இந்த விளையாட்டில் காளைக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது மிகவும் சிறப்பு. எங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் என்னிடம் கேட்டார், “மேடம், உடனடியா என்னை இந்த உலகமே திரும்பிப் பார்க்கணும், நான் புகழ் அடையனும்னா நான் என்ன செய்யணும்” நான் சொன்னேன்…. “இதற்கும் திருவள்ளுவர் ஒருவர்தான் உதவி செய்யக் காத்திருக்கிறார், அவரே உங்களுக்கும் உதவுவார். அவருடைய திருக்குறளின் 49ஆவது அதிகாரத்தைப் படியுங்கள். அல்லது 485ஆவது திருக்குறளையாவது படித்துப் புரிந்து கொள்ளுங்கள் தெரியும்” என்றேன்.   அதற்கு அவர், “உடனே அதைத் தேடிப் படிக்கிறது நடக்கும் காரியமா மேடம்,

"துயிலெடை நிலை'யில் மணிவாசகர் செய்த புரட்சி!

Image
"துயிலெடை நிலை'யில் மணிவாசகர் செய்த  புரட்சி! -இடைமருதூர் கி.மஞ்சுளா  தினமணி - தமிழ்மணி 01.1.2017   ÷திருவாசகத்தின் 20ஆவது பதிகமான திருப்பள்ளியெழுச்சியில் உள்ள பத்துப் பாடல்களின் மூலம் இயற்கையின் அழகு, இறைவனின் இயல்பு, திரோதான சத்தியின் இயல்பு, இறைவன் குடிகொண்டிருக்கும் இடம், அம்மையின் அருள்திறம், அடியார் இலக்கணம், திருப்பெருந்துறையின் சிறப்பு, அடியார்களை ஆற்றுப்படுத்துதல், மெய்யியல் கருத்துகள், யோகத் தத்துவம், சைவ சித்தாந்தம், உவமைகள் எனப் பல்வேறு புரட்சிகளை அருளிச் செய்துள்ளார் மணிவாசகர்.   திருப்பள்ளியெழுச்சி:        "திரு' என்னும் சொல் சிறப்புப் பொருளையும், "பள்ளி' என்னும் சொல் படுக்கையையும், "எழுச்சி' என்னும் சொல் எழுந்திருப்பதையும் சுட்டும். இறைவனை எழுப்புவதால் "திரு'ப்பள்ளியெழுச்சி ஆயிற்று. இறைவனுடைய ஐந்தொழில்களுள் (பஞ்ச கிருத்யங்களுள்) ஒன்று திரோதானம். இதை சைவ சித்தாந்தம் "மறைப்பாற்றல்' எனக்கூறும். திருப்பள்ளியெழுச்சியை "திரோதான சுத்தி' என்கிறது பதிகக் குறிப்பு. அதாவது, மறைப்பாற்றலின் வலி மடங்குதல், இறைவனைத