Posts

Showing posts from May 14, 2017

தினமணி சிறுவர் மணி... மதி இழந்த மந்தி!

Image
தினமணி சிறுவர் மணி...13.5.2017 மதி இழந்த மந்தி! -இடைமருதூர் கி.மஞ்சுளா ÷அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. "கதைத் தாத்தா வந்தாச்சுடா....' என்ற குரல் கேட்டதும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் அனைவரும் "திடுபுடு திடுபுடு' என்று ஒலி எழுப்பியபடி மாடிப் படிகளிலிருந்து இறங்கி, குடியிருப்பின் கீழே ஆஜராகி விடுவார்கள். ""ஒரு ஊர்ல ஒரு....'' என்று அந்தத் தாத்தா ஆரம்பித்ததும் சிறுவர்கள் அனைவரும் "வாவ்வ்வ்வ்'' என்று உற்சாகக் குரல் கொடுப்பார்கள். ÷ அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசிக்கும் மீனாவின் தாத்தா கிராமத்திலிருந்து சென்னை வந்து இரண்டு வாரங்களாகின்றன. மீனாவின் பாட்டி இறந்தபிறகு, தாத்தாவை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்பதால் மீனாவின் அம்மா, அவரைச் சென்னைக்கே அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துவிட்டார். தாத்தா ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியர். ÷ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் அந்தக் குடியிருப்பின் அருகே இருக்கும் சிறு சிமெண்ட் பெஞ்சுகளில் அங்கு வசிக்கும் சிறுவர்கள் அனைவரையும் அமரவைத்து விடுவார். கர்ண பரம்பரைக்

கலித்தொகையில் கற்புநெறி!

Image
கலித்தொகையில் கற்புநெறி! -மணிவாசகப்பிரியா By- இடைமருதூர் கி.மஞ்சுளா  (தினமணி - தமிழ்மணி 14.5.2017) ÷"கற்பு' என்பதற்கு அகராதியில் கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு, ஆணை, தியானம் எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இங்கு மகளிர் கற்பு குறித்து காண்போம். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்' (6-4) என்று வியந்து போற்றினார் வள்ளுவப் பெருந்தகை. "பெண்ணின் பெருமை' பேசியவர் திரு.வி.க. "புதுமைப் பெண்'களைப் படைத்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். பெண் குழந்தைகள் பற்றி சிறப்பாகப் பாடிவைத்தவர் பாரதிதாசன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர். இப்படி எத்தனையோ அறிஞர்களும் கவிஞர்கள் பெண் பிறவியைப் பெரும் பிறவியாகப் போற்றியுள்ளனர். ÷ஔவையார், காரைக்கால் அம்மையார், சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எனப் பலரும் தம்முடைய பாடல்களில் ஒழுக்கம், கற்பு நெறி போன்றவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதியதன் காரணம், "கற்பு ஒன்றுதான் பெண்ணுக்கு அணிகலன்' என்பதால்தான். அதை இருவருக்கும் (ஆண