Posts

Showing posts from March 8, 2015
Image
மணமுறிவைச் சந்திக்கும் ஒரு     பெண்ணின் அவஸ்தை               ஆத்மதாகம் - இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்     (திருப்பூர் மந்திய அரிமா சங்கத்தினால் (2014 க்கான) சக்தி விருது பெற்ற நாவல்)                          சுப்ரபாரதிமணியன்               ஆணின் துணையில்லாமல்   வாழ்வது பெண்ணுக்குத் தரும் சிரமங்கள் அளவில்லாததுதான். தந்தையின் இழப்பு அது போன்ற சமயங்களில்   பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில். நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும் வேதனை தருகிறவர்கள். விவாகரத்து முடிந்து விட்டால் போதும். நீதிமன்றத்திற்கு வந்து போகும் செலவாவது மிஞ்சுமென்று   ஏக்கப்படும் சில பெண்கள். குழந்தைக்காக விட்டுக்கொடேன் என்று ஏங்கும் சிலர். சில உறவுகளை நகங்களை வெட்டுவது போல் வெட்டினால்தான் இரு தரப்பினரும் வாழ முடியும் என்ற கட்டாயம்   வரும்போது மட்டுமே வரும் கதாபாத்திரங்கள் சிலதும் கூட. 59 வயது பெண்ணும் அங்கு காணப்படுகிறாள்.   தாம்பத்ய உறவுச் சிக்கல் அந்த வயதிலும் அவளுக்கு.. எட்டுமாத க