Posts

Showing posts from October 30, 2016

உன்னையே நீ ஒப்பாய்....

Image
திருச்சி மலைக்கோட்டை, உச்சிப் பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு,  உச்சிப் பிள்ளையாரை ஓவியமாக வரையும் என் ஓவியத் தந்தை  கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். (ஓவிய ஆசிரியர்) ஆண்டு நினைவில் இல்லை. (அந்தக் கால திருச்சி மலைக்கோட்டை) இவர் தஞ்சை,  பாவநாசம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர்.. மேலும் வேதாரண்யம்,  மன்னார்குடி,  மணல்மேடு,  திருவாரூர், நாச்சியார்கோயில் முதலிய ஊர்களில் உள்ள பள்ளியிலும் பணிபுரிந்தவர்.  இவரோடு பணிபுரிந்தவர்களோ அல்லது படித்த மாணவர்களோ இருந்தால் இவரை நினைவுகூருங்கள்.  தான் மறைந்தாலும் தன் கண் மணிகளின் மூலம் இந்த உலகை ( இன்னொருவர்  மூலம்) பார்த்துக் கொண்டிருப்பவர்.   (இவர் கண், தானம் செய்யப்பட்டது) இடைமருதூர் ஈசனை எனக்கு அறிமுகப்படுத்தியவர். அவ்வீசன் பெருமைகளையெல்லாம்  விரித்துரைத்தவர். மேலே கண்ட....  யாரோ எழுதி இணையத்தில் விட்ட ஐந்து (கவிதை வரிகள் போல்) வரிகள் இணையத்தில் எதையோ தேடியபோது கிடைத்தது. இப்படியொரு உணர்வை வெளியிட்ட தோழரோ அல்லது தோழிக்கோ மிக்க நன்றி. இது அப்பாவை மிகவும் நேசிக்கும் ஒவ்வொரு மகளின், மகனின் உண்மை உணர

இன்றைய தேவை: மூவரின் அமுத மொழிகள்

Image
இன்றைய தேவை: மூவரின் அமுத மொழிகள் - இடைமருதூர் கி . மஞ்சுளா   மூவரும் நிகழ்த்தும் அற்புதம்         பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரில் ஒருவர் பெயரைச் சொன்னால் போதும், மற்ற இருவரும் நம் நினைவுக்கு வந்துவிடுவர். இதுவே மூவர் அவதாரத்தின் அற்புத லீகைகளாகும். இந்த மூவரும் என் மனத்தில் வந்தது எப்படி என்பதை இங்குப் பதிவு செய்வது அவசியம்.         நான் சிறுமியாக இருந்தபோது (10 வயது)   என் எங்கள் இல்லத்தில் இருந்த நூல்களில் பகவான் ராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்கள்தான் (சின்னச்சின்ன நூல்கள்) அதிகம். அதையும் என் மூத்த சகோதரி கி. விஜயலட்சுமி அவர்கள்தான் அதிகம் வாங்கிப் படிப்பார். அவர் பள்ளி பயிலும் நாளிலிருந்தே சுவாமிஜியின் தீவிர பக்தை. அவர் மூலமாகத்தான் முதன் முதலாக சுவாமிஜி என் மனத்தின் உள்ளே புகுந்தார்.        மேலும், அந்தச் சகோதரியுடன் 1989-இல் திருச்சி, பொன்மலைப்பட்டியில் ஓராண்டு வசிக்க நேர்ந்தபோது, அங்கிருந்த சாரதா தேவியார் ஆசிரமத்திற்கு வாரா வாரம் என்னையும் அழைத்துச் செல்வார்.   அங்கு சென்று அக்க