Posts

Showing posts from March 5, 2017

இந்தியப் பெண்மணிகள்

Image
இன்று உலக மகளிர் தினம் (8.3.2017) இந்தியப் பெண்மணிகளைப் புகழ்ந்து வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் விரிவாக ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலிருந்து சில துளிகள் மட்டும்... "ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச்சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். பரிபூரண சுதந்தரத்துடன் இருப்பவளே நிறைவான பெண்ணாக இருக்க முடியும். ÷இந்தியாவின் குடும்பத்தின் ஆதாரம் தாய், எங்கள் லட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய், எனவே தாய் எங்களுக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவுள் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே ஆவார். எங்கள் கடவுள் அறுதி நிலையிலும், தனி நிலையிலும் உள்ளவர். அறுதி நிலையில் அவர் ஆண், தனி நிலையில் அவர் பெண். இவ்வாறுதான்  "தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு' என்று நாங்கள் சொல்கிறோம். ÷தற்கால இந்துப் பெண்களின் வாழ்க்கையினுடைய மையக் கருத்து அவளுடைய கற்பு. வட்டத்தின் மையம் மனைவி; அந்த மையத்தை நிர்ணயிப்பது அவளது கற்பு. இந்தக் கருத்தை அளவுக்கு மிஞ்சி நீட்டியதே இந்து விதவைகளை

மகளிர் தினக் கொண்டாட்டம் தேவையா ?

Image
உலக மகளிர் தினம் கொண்டாட வேண்டியவர்களா நாம்? வெட்கக்கேடு. ஒரு பக்கம் மகளிரைப் போற்றிக்கொண்டு இன்னொரு பக்கம் அவர்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்டிருக்கும் உலகம் இது. ஒரு நாளைக்கு பத்து பேருக்கு மேல் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுகின்றனர், ஒரு நாளைக்கு பத்து, பதினைந்து இடங்களில் மூதாட்டிகளின், நடுத்தர வயதுப் பெண்களின் கழுத்தை அறுத்து தங்க நகைக்ளுக்காக கொலையும், தாக்குதலும் நடக்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை…. ஒருபுறம் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன, இன்னொரு புறம் மனைவியை வெட்டிய கணவன், அம்மாவைக் கொலை செய்த குப்பன் என்ற செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், தாய்க்கும் தாரத்திற்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாதக் காமுகத் தந்தைகளின், சகோதரர்களின் குடும்பப் பாலியல் (சிறுமிகள் மீது) தொந்தரவுகள் வேறு…. இந்த லட்சனத்தில் மகளிர் தினம் கொண்டாடுவது ஒன்றுதான் குறைகிறதாக்கும்….   (ஓவியம் - தமிழ் - நன்றி: தினமணி-தமிழ்மணி) மகளிர் தினம் கொண்டாடாத காலங்களிலும் நம் பாட்டியும், பாட்டிக்குப் பாட்ட

உலக மகளிர் தினமாமே…

Image
இன்று உலக மகளிர் தினமாமே… அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆண்டில் ஒருமுறை - ஒரு நாள் மட்டும்தானா பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள்? 365 நாள்களும் அடுக்களையை விட்டு அகலாமல், குடும்பத்துக்காக   உழைக்கும் அவர்கள் எல்லா நாளுமே போற்றப்பட வேண்டியவர்கள்தாம் என்பதுதான் இறைவனின் இன்றைய அருள் வாக்கு…. 1.    மகளிர் தினம், அன்னையர் தினம் என்றவுடன் என் நினைவில் வருபவர் முதலில் என் தாய், என் தாய் மட்டும்தான். அவர் எனக்குக் கடைசியாக (முனைவர் பட்ட ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது) தயாரித்துக் கொடுத்த தேநீர் இது. அந்த அன்புத் தேநீர், அன்று வாய்க்கு ருசி தந்து, வயிற்றுக்கு இதம் தந்தது. இன்று என் மனத்தை பாரமாக்கிக் கண்களில் கண்ணீர் தருகிறது.  (என் தாயின் அன்பாலும் பாசத்தாலும் நிறைந்த தேநீர் இது) 2.      அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு. தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன், தின இதழ், கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் முதலிய நாளிதழ்களில், வார இதழ்களில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு, பெண் பைலட் ஓட்டிய, பெண்கள் மட்டும் நிறைந்திரு